• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கட்சி சாராத பிரமுகர்களுடனான கலந்துரையாடல் கூட்டம்
  2014-10-24 16:50:10  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி, கம்யூனிஸ்ட் கட்சி சாராத பிரமுகர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தை ஆகஸ்ட் 19-ஆம் நாள் பெய்ஜிங்கில் நடத்தியது. சட்டப்படியான ஆட்சி தொடர்பான முக்கிய முடிவு குறித்து, பல்வேறு ஜனநாயக கட்சிகளின் தலைவர்கள், அனைத்து சீனத் தொழிற்துறை மற்றும் வணிகத் துறை சம்மேளனத்தின் தலைவர்கள், கட்சி சாரா பிரமுகர்கள் ஆகியோரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் கேட்டறிந்தார். மேலும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18-ஆவது மத்தியக் கமிட்டியின் 4-ஆவது முழு அமர்வுக் கூட்டம் தொடர்பான தீர்மானத்தை உருவாக்கும் நிலைமையைப் பற்றியும், அவர் இக்கூட்டத்தில் எடுத்துக்கூறினார். சீன அரசு அக்டோபர் 24-ஆம் நாள் வெளியிட்டுள்ள தகவலில் இது கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040