• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏபெக் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இரு முக்கிய ஆவணங்கள்
  2014-11-11 18:52:14  cri எழுத்தின் அளவு:  A A A   
ஏபெக் அமைப்புத் தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் பற்றிய செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செவ்வாய்க்கிழமை மாலை உரை நிகழ்த்தினார். இந்த தலைவர்கள் கூட்டத்தில் பெய்ஜிங் பணித்திட்டம் மற்றும் ஏபெக் அமைப்பின் 25-ஆவது ஆண்டு நிறைவு பற்றிய அறிக்கை ஆகிய இரண்டு ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று ஷிச்சின்பிங் தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணங்கள், ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் வளர்ச்சித் திசை, நோக்கம், நடவடிக்கை ஆகிவயற்றைத் தெளிவுபடுத்துகின்றன. நடப்புக் கூட்டம், ஆசிய-பசிபிக் ஒத்துழைப்பு புதிய கட்டத்தில் நுழைந்துள்ள முக்கிய கூட்டமாகும். பல்வேறு உறுப்பு நாடுகளின் முயற்சிகளுடன், இக்கூட்டம் அதிக சாதனைகளைப் படைத்துள்ளது. திட்டமிடப்பட்ட இலக்குகள் நிறைவேற்றப்பட்ட நிலையில், பல்வேறு தரப்புகளும் மனநிறைவடைந்துள்ளதாக ஷிச்சின்பிங் கூறியுள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040