• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குழந்தைகளின் உரிமை நலனை பாதுகாப்பதற்கு ஐ.நாவின் முயற்சி
  2014-11-21 16:45:58  cri எழுத்தின் அளவு:  A A A   

குழந்தைகளின் உரிமை நலன் பற்றிய பொது ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஐ.நா 20-ஆம் நாள் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

2015-ஆம் ஆண்டுக்குப் பிந்திய வளர்ச்சித் திட்டத்தில், குழந்தைகளின் உரிமை மற்றும் நலன்களை உத்தரவாதம் செய்யும் அம்சம் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா பேரவைத் தலைவர் சாம் கஹாம்பா குய்சா 20-ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.

குழந்தைகளின் உரிமை நலன் பற்றிய பொது ஒப்பந்தம், 1989-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் நாள் ஐ.நா பொது பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குழந்தைகளின் உரிமையை உத்தரவாதம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட சட்ட ரீதியான கட்டுப்பாடு கொண்ட சர்வதேச உடன்படிக்கை இதுவாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040