• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன தலைமை அமைச்சர்: புதிய வளர்ச்சி, புதிய எதிர்காலம்
  2014-11-22 17:53:14  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் 19 முதல் 21ஆம் நாள் வரை சே ஜியாங் மாநிலத்தின் யீ உ மாவட்டத்திலும் ஹாங் சோ மாநகரிலும் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதனிடையில், இணையப் பொருளாதாரம் உள்ளீட்ட புதிதாக வளர்ந்து வரும் தொழில்களின் வளர்ச்சிக்கு லீ கெச்சியாங் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்.

பொருளாதார வளர்ச்சியில் வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பது முக்கியமானது. இவ்வாண்டு பொருளாதார வளர்ச்சி வீழச்சியடையும் அழுத்தம் ஏற்பட்டது. ஆனால், புதிய தொழில்கள், குறிப்பாக சேவை துறை வேகமாக வளர்ந்துள்ளதால், வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனவே, பொது மக்கள் தொழில் நடத்துவதற்கு ஆதரவு அளிக்கும் வகையில், புதிய தொழில்கள் மற்றும் புதிய வழிமுறைகளின் வளர்ச்சியை தூண்டும். இந்நிலையில், பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உந்து ஆற்றலை ஏற்படுத்தும் என்று லீ கெ ச்சியாங் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040