இணையப் பாதுகாப்பை உருவாக்கி, இணைய நாகரிகத்தைப் பகிர்ந்து கொள்வது என்ற தலைப்பிலான முதலாவது சீன இணையப் பாதுகாப்பு பிரச்சார வாரத்தின் துவக்க விழா நவம்பர் 24ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள சீன மில்லினியம் நினைவுச்சின்னத்தில் நடைபெற்றது. இவ்வாரத்தில், நிதி, தொலை தொடர்பு, மின்னணு வணிக அலுவல் முதலிய முக்கிய துறைகளின் இணையப் பாதுகாப்பு பிரச்சினை குறித்து தொடர்புடைய பிரச்சார நடவடிக்கைகள் நடத்தப்படும்.