• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹிப்னாஸிஸ் மருத்துவம் வழியாக உடல் எடையை குறைக்கும் தகவல்
  2014-11-25 15:58:39  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆஸ்திரேலியா நாட்டில் ஜார்டன் தைரிகிதிஸ் என்பவர், ஹிப்னாஸிஸ் என்ற வழிமுறையில் உடல் எடையை வெற்றிகரமாக்க் குறைத்துள்ளார் என்று செய்தி வெளியானது.

இவ்வாண்டு அவருடைய வயது 47. 2012ஆம் ஆண்டின்போது அவரது உடல் எடை, 310 கிலோவை எட்டியது. ஆஸ்திரேலியா நாடளவில் மிக அதிக எடை உடையவராக அவர் கருதப்படுகிறார்.

ஹிப்னாஸிஸ் வழிமுறை மூலமாக, குப்பை உணவை சாப்பிடும் ஆர்வத்தை குறைக்கவும், உடல் பயிற்சியின் விருப்பத்தை அதிகரிக்கவும் கடந்த 2.5 ஆண்டுகளில் முயற்சி செய்துள்ளார் என்று அவர் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தற்போது, அவருடைய எடை, 107.6 கிலோ தான். 202.4கிலோ எடை குறைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040