• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடற்பரப்பில் 12 நாட்களாக தத்தளித்த அமெரிக்க மீனவர்
  2014-12-17 17:09:38  cri எழுத்தின் அளவு:  A A A   

அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தைச் சேர்ந்த 67வயது மீனவர் ஒருவர் கடற்பரப்பில் 12 நாட்களாக தத்தளித்த பிறகு மீட்கப்பட்டுள்ளார்.

நன்றி சொல்லும் தினத்தில், இந்த மீனவர் வெளியே சென்ற பிறகு அவரது தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்று அவரது குடும்பத்தார் கூறினார்.

கடலுக்குள் சென்ற பிறகு காற்று மற்றும் கடல் அலையை சந்தித்ததால், படகு கடுமையாக பாதிக்கப்பட்டது. படகை கட்டுப்படுத்த முடியாததால், இறுதியில் அவர் கடலுக்குள் தூக்கி எறியப்பட்டதாக இம்மீனவர் தெரிவித்தார்.

அவர் காணாமல் போனதை உறுதி செய்த குடும்பத்தார், அமெரிக்க கடலோர காவல் துறையிடம் அறிவித்தனர். அதையடுத்து தேடுதல் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால், 10 நாட்களுக்கு பிறகு அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எதிர்பாராத இன்னலை சந்தித்து அந்த மீனவர் இறுதியில் உயிரிழந்தார் என்று கடலோர காவல் துறை கருத்து தெரிவித்தது.

இருப்பினும், தந்தை உயிருடன் இருப்பதாக, மீனவரின் மகன் நம்பிக்கை கொண்டிருந்தார். இறுதியில், 12-வது நாள் ஆகி விட்டபோது பணியில் ஈடுபட்ட கடலோர காவல் துறை கடலோரத்தில் இருந்து 100கிலோமீட்டர் தொலைவிலுள்ள கடற்பரப்பில் மீனவரை கண்டறிந்தார். அப்போது,அதிக பசியாலும் தாகத்தாலும் அவர் இருந்தார். உடல் நலக் குறைவும் ஏற்பட்டது. கடலில் தத்தளித்த போது மீன்களைப் பிடித்துச் சாப்பிட்டதால் தான், உயர் பிழைத்தேன் என்று மீட்கப்பட்ட மீனவர் தனது மறக்க முடியாத அனுபவத்தை தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040