• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியா ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது
  2014-12-18 15:40:47  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆளில்லா விண்கலத்துடன் ஜி.எஸ்.எல்.வி மார்க் -3 ராக்கெட்டை இந்தியா வியாழக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிஹோட்டாவில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.

ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட்டானது 630 டன் எடை கொண்டவை. இந்த வகை ராக்கெட்டுகள் சுமார் 4 ஆயிரம் கிலோ எடையுள்ள விண்கலத்தை ஏந்திச் செல்லும் திறன் கொண்டவை. தற்போது அனுப்ப்ப்பட்டுள்ள ஆளில்லா விண்லகலத்தின் எடை 3,700 கிலோவாகும்.

ஆளில்லா விண்கலத்தில் 2 முதல் 3 பேர் தங்கும் வரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட்டின் விண்வெளி நிலைத்தன்மை மற்றும் ஆளில்லா விண்கலம் புவியின் வளிமண்டலத்துக்குள் திரும்பும்போது அதன் சிறப்பியல்புகள் குறித்தும் ஆராயவே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040