• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நடைமுறைக்கு ஏற்ற புதிய பேச்சுவார்த்தை
  2014-12-18 18:26:03  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை தொடர்பான 6 நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் பன்முக உடன்படிக்கைக்கான புதிய பேச்சுவார்த்தை 17ஆம் நாளிரவு ஜெனீவாவில் நிறைவடைந்தது. இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சீன வெளியுறவு அமைச்சகத்தின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரிவுத் தலைவர் வாங் ஜுன் பேசுகையில், இந்தப் பேச்சுவார்த்தை நடைமுறைக்கு ஏற்றதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.

தற்போதைய பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சிறந்த முன்னேற்றப் போக்கை தொடர்புடைய தரப்புகள் பேணிமதித்து, பொது கருத்துக்களைக் கடைப்பிடித்து, கூடிய விரைவில் அரசியல் முடிவை எடுக்க வேண்டும் என்று கூறியதோடு, பல்வேறு தரப்புகளும் கருத்துவேற்றுமையை குறைத்து, பன்முக உடன்படிக்கையை வெகு விரைவில் உருவாக்குவதற்கு கடந்த பேச்சுவார்த்தையில் சீனா முன்வைத்த கருத்து துணைபுரிய வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040