• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பராக் ஒபாமா மீது ரஷியா ஏமாற்றம்
  2014-12-20 16:29:02  cri எழுத்தின் அளவு:  A A A   
உக்ரேனின் சுதந்திரத்துக்கு ஆதரவளிக்கும் சட்ட முன்மொழிவில் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா கையொப்பமிட்டு ரஷியா மீது மேலதிக தடை நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதனால், ரஷியா கடும் ஏமாற்றமடைந்துள்ளதாக ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அலிக்ஸேடார் லூகாஷேவிச் 19ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இச்சட்ட முன்மொழிவுக்கும் உக்ரேனின் சுதந்திரத்துக்கு ஆதரவளிப்பதற்கும் தொடர்பு இல்லை. அது ரஷியாவை ஆத்திரமூட்டும் செயலாகும். ரஷியா அதை ஏற்றுக்கொள்ளாது. மேலும், அமெரிக்காவின் இச்செயல்பாடு பல துறைகளில் இரு நாட்டு இயல்பான ஒத்துழைப்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும். இச்சட்ட முன்மொழிவின் நடைமுறையாக்கத்தின்படி, ரஷியா பதில் நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.

ஐரோப்பிய ஒன்றியம் ரஷியா மீது மேற்கொண்டுள்ள தடை நடவடிக்கைகளுக்கு ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஃபிரேன்க் வார்க் ஸ்தேன்மேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தின் பொருட்டு, ரஷியா சமரசம் செய்து கொள்ளாது. பொருளாதார நடவடிக்கை மூலம், ரஷியாவைச் சமரசம் செய்வதோடு, ஐரோப்பா பிரதேசத்தின் பாதுகாப்பு நிலைமையை வலுப்படுத்துவது தவறான கருத்தாகுமென ஜெர்மனி செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளிக்கும் போது ஸ்தேன்மேர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040