• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வானொலி நிலையத்தின் இயக்குநர் திரு வாங் கெங் நியனின் புத்தாண்டு வாழ்த்துரை
  2015-01-01 18:33:49  cri எழுத்தின் அளவு:  A A A   


2015ஆம் ஆண்டு வரும் போது, சீன வானொலி நிலையத்தின் இயக்குநர் திரு வாங் கெங் நியன், சீன வானொலி நிலையத்தின் அனைத்து பணியாளர்களின் சார்பாக, வானொலி மற்றும் இணையத்தின் மூலம், எல்லா நேயர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார். பரிமாற்றங்களால், மனிதமும் நாகரிகமும் வளர்ச்சியடையும். புதிய ஆண்டில், சீன வானொலி நிலையம், உலகத்துக்கு சீனாவில் நிகழ்ந்த கதைகளைக் கூறி, சீன மக்களுக்கு உலகத்தின் தனிச்சிறப்பை விளக்கிக் கூறும் என்று அவர் தெரிவித்தார். அடுத்து அவரது புத்தாண்டு வாழ்த்துரை கேளுங்கள்.

அன்புள்ள நேயர்களே. 2015ஆம் ஆண்டு வந்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு வணக்கம் சொல்லி அனுப்பவிட்டு, 2015ஆம் ஆண்டை வரவேற்கின்ற நேரத்தில், நான், சீன வானொலி நிலையத்தின் அனைத்து பணியாளர்களின் சார்பாகவும் என் சொந்த பெயரிலும் நேயர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகள் தெரிவிக்கிறேன்.

2014ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 65வது ஆண்டு நிறைவாகும். நாட்டின் மாபெரும் மறுமலர்ச்சி நனவாக்குவதில், சீனா முக்கிய காலடி எடுத்து வைத்துள்ளது. இவ்வாண்டில், நவீன ஒட்டுமொத்த புதிய ரக சர்வதேச செய்தி ஊடகக் குழுமத்தை உருவாக்கும் வழியில், புதிய சாதனையை சீன வானொலி நிலையம் எட்டியுள்ளது.

2014ஆம் ஆண்டில், உலகின் நேயர்கள், முன்பு போலவே சீனாவிலும் சீன வானொலி நிலையத்திலும் கவனம் செலுத்தினர்.

அன்புள்ள நண்பர்களே உங்கள் கவனமும் ஊக்கமும், நாங்கள் முன்னேற்றும் ஆற்றலாகும். இதனால் உங்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன்.

2014ஆம் ஆண்டில், உலகளவில் சீன வானொலி நிலையத்தின் செய்தியாளர்களின் மூலம், உலகின் எல்லா இடங்களில் கவனம் செலுத்தினோம். உலக பொருளாதார மிதவாத மீட்சிக்கு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். உயிர் வாழ்வு சூழ்நிலையை மேம்படுத்துவதற்கு பங்காற்றிய மக்களுக்கு மதிப்பு தெரிவிக்கிறோம். எபோலா நோயால் பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு இரக்கம் தெரிவிக்கிறோம்.

இன்று, நாங்கள் வேறுபட்ட நாடுகளில் இருக்கிறோம். ஆனால், எங்களுக்கிடையிலான பரிமாற்றங்கள் நெருங்கி வருகின்றன. ஒன்றை ஒன்று ஒன்றிணைக்கும் தலைவிதியான பொது சமூகமாக மாறியுள்ளது.

பரிமாற்றங்களால், மனிதமும் நாகரிகமும் வளர்ச்சியடையும்.

உலகத்தை சீனா அறிந்துகொள்கிறது. உலக மக்களும் சீனாவை அறிந்துகொள்ள விரும்புகிறோம். அறிந்துணர்ச்சி, நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும். தவறான எண்ணத்தையும் மோதலையும் குறைக்கும்.

சீனாவின் கருத்துகளையும், சீனர்கள் உலகத்தை அறிந்துகொள்ளும் வழிமுறையையும், சீனாவில் நிகழ்ந்த கதைகளையும் சீன வானொலி நிலையம் மேலதிகமாக ஒலிபரப்பி வருகிறது.

உலகளவில் நிகழ்ந்த கதைகளை சீன மக்களுக்கு அறிமுகம் செய்வோம். உலகத்தை சீனர் அறிந்துகொள்ளச் செய்வோம்.

தற்போது, சீன வானொலி நிலையம் 65 மொழிகளைப் பயன்படுத்தி, வானொலி, தொலைகாட்சி, இதழ், இணையத்தளம், கைப்பேசி பயன்பாடு ஆகிய வழிமுறைகளின் மூலம், உலகத்துக்கு செய்திகளை அனுப்புகிறது.

2015ஆம் ஆண்டில், பல்வகை செய்தி ஊடகெங்களை ஒன்றிணைப்பதை வலுப்படுத்துவோம். இணையக்காலத்தில், புதிய வழிமுறையின் மூலம், நண்பர்களுடன் உலகின் செய்திகளையும் கதைகளையும் பகிர்ந்து கொள்வோம். புதிய பரவல் வழிமுறை, எங்களுக்கிடையிலான உறவை மேலும் நெருங்கும். எங்களுக்கிடையிலான நட்புறவையும் அறிந்துணர்ச்சியையும் முன்னேற்றும் என்று நம்புகிறோம்.

நேயர் நண்பர்களே மீண்டும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நீங்கள் கேட்டது, சீன வானொலி நிலையத்தின் இயக்குநர் வாங் கெங் நியனின் புத்தாண்டுரை.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040