• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நான் வர்த்தக நண்பர் மட்டுமல்ல, நாட்டுப் பண்பாட்டின் இணைப்பாளரும் கூட
 
  2015-01-29 09:00:32  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் ஹாங்சோ நகரில் அரூணா அவர்களைச் சந்தித்தபோது, அவர் சீன வாடிக்கையாளர் ஒருவருடன் பணி பற்றி கலந்தாய்வு செய்துக் கொண்டிருந்தார். சரளமாக சீன மொழி பேசி, கவனக்குவிய பார்வையுடன், சில சமயம் பதிவேட்டில் எழுதினார். சில சமயம் விரைவாக விசைப்பலகையில் தட்டினார். இவையெல்லாம், அவர் அனுபவமிக்க வர்த்தகர் என்பதைக் காட்டுகின்றது. இது தான் தனது அன்றாடும் நிலவும் பணி நிலைமை என்று அரூனா கூறினார்.

அரூணாவின் குடும்பம் ஆடை தொழில்நிறுவனம் ஒன்றை நடத்துகிறது. குழந்தை காலத்திலே வர்த்தக சூழ்நிலையில் வாழ்ந்த காரணத்தால், வர்த்தகத்தில் அவர் வல்லுநராக மாறியுள்ளார். இந்தியாவில் மட்டுமே வர்த்தகம் நடத்துவது போதாது என்று அரூணா நினைத்தார். 2004ஆம் ஆண்டு, நம்பிக்கையுடன் அவர் சீனாவுக்கு வந்து, நீண்ட காலமாக நினைவில் இருக்கும் இப்பெரிய சந்தையை ஆராயத் துவங்கியுள்ளார். சுமார் 10 ஆண்டுகள் சீனாவில் வர்த்தகம் செய்து வருவதால், அவர் சீன மொழியை நன்றாகச் பேசுகிறார். அதனால், அவரின் வர்த்தகம் மென்மேலும் சீராக மாறியுள்ளது. இப்போது அவர் தாமோ உணவு வகை தயாரிப்பு நிறுவனம் மற்றும் தாமோ பண்பாட்டு வளர்ச்சி நிறுவனத்தின் முதன்மைச் செயலாளராக இருக்கிறார். சீனாவின் யீ உ, குவாங்சோ மற்றும் ஹாங்காங் ஆகிய பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களை அவர் நடத்தி வருகிறார். அவரின் வாடிக்கையாளர்கள் உலகின் 20க்கும் மேலான நாடுகளில் உள்ளனர். சீனாவில் மாபெரும் சந்தை உண்டு. எல்லா வர்த்தகர்களும் சாதனை பெற விரும்பும் இடம் இது என்று சீனாவுக்கு வந்ததற்கான காரணம் குறித்து கூறும்போது அவர் கூறினார்.

தற்போது உலகின் தொழில்நிறுவனமாகச் சீனா இருக்கிறது. வர்த்தகத்திற்காக 20க்கும் மேலான நாடுகளுக்குப் போயிற்று வந்துள்ளேன். எடுத்துக்காட்டாக, எண்ணெய் அல்லது பராஸ்திக் மூலபொருட்களை வாங்க வேண்டுமென்றால், லண்டனுக்குப் போவேன். வேறு வகை பொருட்களை வாங்க வேறு நாட்டுக்குப் போக வேண்டும். ஆனால், ஒரே முறையில் பல பொருட்களை வாங்க விரும்பினால், சீனாவுக்கு வருவேன். விரும்பும் எல்லாவற்றையும் இங்கு கிடைக்கப் பெறலாம் என்று அரூணா கூறினார்.

பரப்பரபான வேலையால் அவர் உலகின் பல்வேறு இடங்களுக்குப் போக வேண்டியிருக்கிறது. வணிகம் செய்து கொண்டிருக்கிறேன் இல்லை என்றால், வணிகம் செய்ய போகும் வழியில் இருக்கிறேன் என்று அரூணா வேடிக்கையாகக் கூறினார். இம்முறை, நல்ல வர்த்தக வாய்ப்பை நாடி, சீனாவின் புதிய உற்பத்திப் பொருட்களை இந்தியாவுக்குக் கொண்டுச்செல்லும் வகையில், சே ச்சியாங் மாநிலத்தின் தொழில் நிறுவனங்களைக் கள ஆய்வு செய்து வருகிறார். அரூனின் வர்த்தகம் உலகின் பல்வேறு இடங்களில் இருக்கிறது. ஆனால், சீனச் சந்தையே அவரின் மிகப் பெரிய இலக்காகும் என்று அவர் சொன்னார். இது குறித்து அவர் கூறியதாவது:

இரு நாடுகளின் வர்த்தகமானது கடந்த 10 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தக மதிப்பு 7400 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது 2018ஆம் ஆண்டில் 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை அளவை எட்டும் என்று இருதரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். 2025 ஆண்டு என்ற அளவில், இந்தியா-சீனாவிடையேயான வர்த்தக பறிமாற்ற மதிப்பு சர்வதேச அளவில் முதலிடத்தைப் பிடிக்க உள்ளது. விளைவாக இந்திய மக்கள் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. அது என்றுமே குறையப்போவதில்லை. இரு நாடுகளிலும் 35 வயதுடையவர்கள் அதிகம். அதனால், அடுத்த 20 ஆண்டுகளில் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கண்டிப்பாக அதிகரிக்கும்.

கான் சியாங் சோ என்பவர் ஷாங்காயில் ஒரு தொழில்நிறுவனத்தின் விற்பனை கண்காணிப்பாளர். அரூனுடன் வர்த்தம் நடத்தியபோது அவர்கள் நல்ல நண்பர்களாக மாறியுள்ளனர். அரூணாவுடன் பழகிய பிறன் தான், அவரது தொழில் நிறுவனங்கள் இந்தியாவிலுள்ள வர்த்தக வாய்ப்புகளைக் கொண்டுள்ளதை அவர் அறிந்துகொண்டுள்ளார். அதன் மூலம், சீன-இந்திய வர்த்தகம் பற்றி மேலும் ஆழமாக அவர் புரிந்துள்ளார். அவர் கூறியதாவது:

அரூணா இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகர். அவரின் தொழில் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளன. மேலும், சீனா பற்றி அரூணா நன்றாக அறிந்துகொண்டுள்ளார். பல விதங்களில் அவர் மேம்பாட்டை காட்டுகின்றார். அதனால், அவருடன் ஒத்துழைத்து, எளிமையாக இந்திய சந்தையில் நுழைய முடியும். இன்னொரு விதத்தில், இந்தியாவின் தரமான வணிகப் பொருட்களையும் அவர் சீனாவுக்குக் கொண்டுவருவார். இது மிக சிறந்த ஒத்துழைப்பு வழிமுறையாகும் என்று கான் சியங் சோ கூறினார்.

அரூணா சீனாவில் வர்த்தகம் நடத்துவது மட்டுமல்ல, சர்வதேச தமிழ் சங்கத்தின் சீனக்கிளைத் தலைவராகவும் உள்ளார். குறிப்பிட்ட நேரத்தில் சீனாவிலுள்ள தமிழ் வர்த்தகர்களைப் பிரதிநிதித்துவமாக, வேறு நாடுகளிலுள்ள தமிழ் சங்கத்தின் தலைவர்களுடன் வர்த்தகம் குறித்து கலந்தாய்வு செய்கிறார். அவரைப் பொருத்தவரை, இது கௌரவம் அடையும் விடயமாகும். சீனாவும் இந்தியாவும் வளரும் பெரிய நாடுகளாகும். உலகில் மிக முக்கிய செல்வாக்கு கொண்ட நாடுகளாக அவை மாறியுள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில், இரு நாடுகளுக்கிடை இருதரட்புறவு தொடர்ந்து நிதானமாகியுள்ள அதேவேளையில், இருதரப்பின் வர்த்தகமும் மேலும் விரைவாக வளர்ந்து வருகிறது. வர்த்தக ஒத்துழைப்பின் எதிர்காலம் பற்றி, சீனாவில் பல ஆண்டுகள் முயற்சி மேற்கொண்டுள்ள அரூணா நம்பிக்கை கொள்கிறார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040