• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகத்தில் பரவலாகும் ஷாவ் லின் பௌத்த மருத்துவம்
  2015-01-29 09:12:00  cri எழுத்தின் அளவு:  A A A   

 

ஷாவ்லின் கோயிலின் மிக முக்கிய பௌத்த மண்டபம

பௌத்த மருத்துவம் என்பது, இந்திய மற்றும் சீனாவின் மருத்துவப் பண்பாடுகளின் அடிப்படையில், ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்து உருவாகியுள்ள மருத்துவப் பிரிவாகும். சீனப் பாரம்பரிய மருத்துவத்தின் மறைபொருள் உடையது மட்டுமல்ல, கிழக்குப் பகுதி பௌத்த மதத்தின் மர்மமும் அதில் அடங்கியுள்ளது.

தற்போது, 1217ஆம் ஆண்டில் உருவாகிய ஷாவ் லின் மருந்து ஆணையம் ஷாவ் லின் மருத்துவத்தை வளர்த்துள்ள முக்கிய நிறுவனமாகும். கோயிலிலுள்ள துறவிகள் மற்றும் சுற்றியுள்ள பொது மக்களுக்கு சிகிச்சையை வழங்குவது இவ்வாணையத்தின் முக்கிய பொறுப்பு. பண்டை காலம் முதல் இதுவரை அது பல மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளதோடு, பௌத்த மருத்துவப் பண்பாட்டை பரவல் செய்யும் முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளது. இவ்வாணையத்தின் தலைவர் ஷி யான் லின் கூறியதாவது

பௌத்த மருத்துவம், மக்களின் உடல் மற்றும் மனச் சுகாதாரத்தைத் திறங்கும் சாவியாக இருக்கிறது. என் தந்தை கடுமையாக நோய்வாய்ப்பட்டபோது, அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சாதனங்களால் பொருத்தப்பட்டு கடும் இன்னலுக்கு ஆளானார். ஆனால் பயன் எதுவும் இல்லை. பௌத்த மருத்துவம் விவேகத்தைப் பயன்படுத்தி, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றார்.

1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040