• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகத்தில் பரவலாகும் ஷாவ் லின் பௌத்த மருத்துவம்
  2015-01-29 09:12:00  cri எழுத்தின் அளவு:  A A A   

பௌத்த மத மறை நூல்கள் வைக்கப்படும் மாளிகை

பௌத்த மருத்துவப் பண்பாட்டை பரவல் செய்யும் வகையில், ஷாவ் லின் மருந்து ஆணையம் பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஆண்டுதோறும் பௌத்த மருத்துவ உச்சி மாநாடும் நடத்துகிறது. அது தவிர, பாரம்பரிய பௌத்த மருத்துவ பௌத்தகங்களின் பாதுகாப்பு, புதிய தொழில்நுட்ப வளர்ச்சி, ஷாவ் லின் கோயிலிலுள்ள மருத்துவ நிறுவனங்களை மேம்படுத்துகின்ற விதங்களில் பல முயற்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. 2012ஆம் ஆண்டு, ஷாவ் லின் கோயிலின் மடாலய தலைவர் ஷி யூங் சின், பெய்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து இயற்றிய சீன பௌத்த மருத்துவம் மற்றும் மருந்து எனும் தொகுதி வெளியாகியது. சுமார் கி.மு 200 சீனாவின் ஹான் வம்சம் முதல் சீன மக்கள் குடியரசு உருவாகும் வரை வெளியாகியுள்ள பௌத்த மருத்துவம் பற்றிய புத்தகங்கள் பல இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. பௌத்த மருத்துவம் பற்றிய ஆய்வு சாதனையாக இது விளங்குகிறது.

1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040