• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசியான் பொது சமூகத்தின் கட்டுமானத்துக்கு சீனா ஆதரவு
  2015-01-29 16:52:14  cri எழுத்தின் அளவு:  A A A   
அண்மையில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர் கூட்டத்தில், ஆசியான் பொது சமூகத்தின் கட்டுமானம், ஆசியானின் எதிர்கால வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் கூறுகையில், கிழக்காசிய ஒத்துழைப்பு, பிரதேச அமைதி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை முன்னேற்றுவதற்கு ஆசியான் முக்கிய ஆற்றலாகும். ஆசியான் பொது சமூகம், இப்பிரதேசத்தில் முதலாவது துணை மண்டலப் பொது சமூகமாகும். அதன் கட்டுமானம் பிரதேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு முக்கிய செல்வாக்கை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

ஆசியான் பொது சமூகத்தின் கட்டுமானத்துக்கும், கிழக்காசிய ஒத்துழைப்பில் ஆசியான் தலைமை பங்காற்றுவதற்கும் சீனா ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040