• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பாகிஸ்தான் நட்புறவு
  2015-01-30 20:39:33  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், பாகிஸ்தான் தேசிய பேரவையின் தலைவர் சர்தார் ஆயாஸ் சாதிக்யை ஜனவரி 30ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார்.

சீன-பாகிஸ்தான் நட்புறவை லீ கெச்சியாங் வெகுவாக பாராட்டினார். பாகிஸ்தான் மற்றும் தொடர்புடைய பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, பிரதேச அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காத்து, செழுமையையும் முன்னேற்ற சீனா விரும்புவதாக லீ கெச்சியாங் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு, பாகிஸ்தான்-சீன நட்புப்பூர்வ பரிமாற்ற ஆண்டாகும். சீனாவுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இரு நாட்டுப் பொருளாதார மண்டலத்தை உருவாக்கப் பாகிஸ்தான் விரும்புகிறது என்று சர்தார் ஆயாஸ் சாதிக் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040