• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ﹒நா பாதுகாப்பவையின் பிப்ரவரி பணிகளின் தொகுப்பு
  2015-02-28 16:53:21  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ﹒நா பாதுகாப்பவையின் பிப்ரவரிக்கான தலைவரும் ஐ﹒நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதியுமான லியூஜெயி 27ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்திச் சீனா மற்றும் வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களுக்கு நடப்புத் திங்கள் பாதுகாப்பவையின் பணிகளைத் தொகுத்துக் கூறினார்.

பிப்ரவரியில், பாதுகாப்பவை மொத்தமாக 20 வெளிப்படை கூட்டங்களையும் 15 மறைமுகக் கலந்தாய்வுகளையும் நடத்தியுள்ளது. சிரியா, மத்திய கிழக்கு, ஈராக், ஏமன், லிபியா, கினியா-பிசாவு உள்பட 20 நிகழ்ச்சி நிரல்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. 7 தீர்மானங்களும், 2 தலைவர் அறிக்கைகளும், 15 தலைவர் செய்தியுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன என்று லியூஜெயி தெரிவித்தார்.

ஐ﹒நா பாதுகாப்பவையின் 15 உறுப்பு நாடுகள் அடுத்தடுத்து இந்த அவையின் தலைவர் பதவி நாடாகச் செயல்பட்டு வருகின்றன. பதவிக் காலம் ஒரு திங்கள் காலம் நீடிக்கும் என்று தெரிகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040