• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஓவியர் சாவ் சிங் அம்மையார்
  2015-03-18 15:52:33  cri எழுத்தின் அளவு:  A A A   

சாவ் சிங் அம்மையார் ஓவியம் வரைவதை, உலகப் பண்பாட்டுப் பரிமாற்றத்தைத் தூண்டுவதற்கான ஒரு வழிமுறையாக கொண்டு, இதில் ஆழ்ந்த உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

சாவ் சிங் அம்மையார், சீனச் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பரிமாற்ற சங்கத்தின் கௌரவ தலைவராக பதவி ஏற்கிறார். 2011ஆம் ஆண்டுக்கு பின், இச்சங்கம், உலகின் பல்வேறு இடங்களில் பல கலை அரங்கேற்றங்களை நடத்தியிருக்கிறது. சாவ் சிங் அம்மையார் கூறியதாவது:  

"வெளிநாடுகளில் கலை அரங்கேற்றத்துக்கு தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும். வெளிநாட்டுக் கலை மற்றும் பண்பாட்டைக் கற்றுக்கொள்ள வேண்டும். அரங்கேற்றம் மூலம், இந்நாடுகளின் பொது மக்கள் மீதான மதிப்பையும் அன்பையும் காட்ட வேண்டும். இதன் மூலம் ஒரே உலகம் (One World)என்ற இலட்சியத்தை நனவாக்க முடியும்" என்றார் அவர்.

நவம்பர் திங்கள் நடுப்பகுதியில், தென் கொரிய ஓவியர் லீ யோங்ஹு பெய்சிங்கில் ஓவியக் கண்காட்சியை நடத்தினார். சீனாவின் சாலைகளை கருப்பொருளாக கொண்ட ஓவியங்கள் பலவற்றை அவர் வரைந்திருந்தார். இந்த ஓவியங்கள் சீன பொது மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த ஓவியக் கண்காட்சி சாவ் சிங் அம்மையாரை மெய்சிலிர்க்க வைத்தது. சாவ் சிங் அம்மையார் கூறியதாவது:

"ஒரு நாட்டுக்கு சென்று பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன், அந்நாட்டின் பழக்க வழக்கங்களை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஏன் எனில் ஓவியங்களில் இவற்றை வெளிப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, தென் கொரியாவுக்குச் செல்ல வேண்டுமானால், ஓவியங்களில் தென் கொரியா பற்றிய அம்சங்களை வரையலாம். இந்த ஓவியங்கள் தென் கொரிய மக்களுக்கு மகிழ்ச்சியை தரும்" என்றார் அவர்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040