• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2014ஆம் ஆண்டு உலகில் ஏற்பட்டுள்ள சீனப் பண்பாட்டின் செல்வாக்கு
  2015-03-25 15:46:20  cri எழுத்தின் அளவு:  A A A   

பத்து ஆண்டுகளுக்கு முன், உலகின் முதலாவது கன்பிஃசியஸ் கழகம் தென் கொரியாவின் சியோல் நகரில் நிறுவப்பட்டது. இது வரை, 475 கன்பிஃசியஸ் கழகங்களும், 851 இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளி நிலை கன்பிஃசியஸ் வகுப்புகளும், 126 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் நிறுவப்பட்டுள்ளன.

1998ஆம் ஆண்டு, ஆஸ்திரியாவின் வியன்னாவிலுள்ள பொன்னிற இசை மண்டபத்தின் அரங்கேற்றத் திட்டப் பட்டியலில், "சீனாவின் புத்தாண்டு இசை விழா" முதன்முறையாக சேர்க்கப்பட்டது. தற்போது, வியன்னா புத்தாண்டு இசை விழா நடைபெறும் இடமாகிய உலகளவில் புகழ் பெற்ற இசை மண்டபத்தில், சீன சந்திர நாட்காட்டியின்படி புத்தாண்டு காலத்தில் சீனாவின் புத்தாண்டு இசை விழாவை நடத்துவது வழக்கமாக மாறியுள்ளது.

சீனப் பண்பாடு உலகில் நுழையும் நிலைமையை இவை காட்டும் அதே வேளையில், சீனப் பண்பாடு உலகில் சீனச் செல்வாக்கின் உயர்வையும் வெளிப்படுத்தியுள்ளது.

2014ஆம் ஆண்டு சீனப் பண்பாடு பற்றி உலக மக்களின் புரிந்துணர்வு மற்றும் ஏற்றுக்கொள்கின்ற நிலை அதிகரித்து வருகிறது. சீனப் பண்பாட்டுக்கும் உலகப் பண்பாட்டுக்குமிடையே ஒன்றுக்கொன்று பரிமாற்றம் செய்து, கற்றுக்கொள்வது மேலும் நெருக்கமாகியுள்ளது. சீனப் பண்பாடு மேலும் வளமாகவும், சுய நம்பிக்கையுடனும் தோற்றமளித்து, உலக அரங்கில் முக்கிய பங்காற்றியுள்ளது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040