• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2014ஆம் ஆண்டு உலகில் ஏற்பட்டுள்ள சீனப் பண்பாட்டின் செல்வாக்கு
  2015-03-25 15:46:20  cri எழுத்தின் அளவு:  A A A   

2014ஆம் ஆண்டு, சீனப் பண்பாடு உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒளிமயமான தனிச்சிறப்புக்களை வெளிப்படுத்தியுள்ளது. சீனப் பண்பாடு உலக அரங்கில் மேலும் உறுதியான காலடியெடுத்து வைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், சீனப் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சியுடன், உலகளவில் சீன மொழி மீதான ஆர்வமும், சீனவியல் மீதான ஆர்வமும் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளன. கடந்த செப்டம்பர் 27ஆம் நாள், முதலாவது "கன்பிஃசியஸ் கழக நாளுக்கான" கொண்டாட்ட நடவடிக்கைகள் உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. ஆடல் பாடல் அரங்கேற்றம், சீன மொழி பேச்சு, நேர்த்தியான கையெழுத்து படைப்புகள் கண்காட்சி, ஆடை காட்சி, பண்பாட்டுப் பிரச்சாரங்கள் ஆகியவை இவற்றில் இடம்பெறுகின்றன. தற்போது, உலகளவில் சீன மொழியைக் கற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை, 10 கோடியை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் திங்கள் கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற 38வது உலக மரபுச் செல்வ மாநாட்டில், சீனா, கிர்கிஸ்தான், கசகஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டாக விண்ணப்பம் செய்த பட்டுப்பாதைத்திட்டப்பணி உலக பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. சீனா, இதர நாடுகளுடன் இணைந்து, உலகப் பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் சேர கூட்டாக விண்ணப்பம் செய்யும் மாதிரியாக, பட்டுப்பாதை சீனப் பண்பாட்டு மரபுச் செல்வத்தின் உலக மதிப்பை காட்டும். அதே வேளையில், சீனப் பண்பாட்டின் இணக்கம், திறப்பு மற்றும் ஒத்துழைப்பு எழுச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

2014ஆம் ஆண்டு ஜூலை திங்கள், சீனா, முக்கிய விருந்தினராக, அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற ஸ்மித்சன் (Smithson) நாட்டுப்புற பழக்க வழக்க விழாவில் கலந்து கொண்டது. கடந்த சில ஆண்டுகளில், சீனா கலந்து கொள்ளும் மிக பெரிய நாட்டுப்புறப் பழக்க வழக்க பரிமாற்ற நடவடிக்கை இதுவாகும். சீனா இந்நடவடிக்கையில் பங்கெடுத்தது, அமெரிக்காவின் லட்சக்கணக்கான மக்களையும், உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த பயணிகளையும் ஈர்த்தது. மேலதிக மக்கள் சீனப் பண்பாட்டை நேரடியாக அனுபவித்துள்ளனர். சீனப் பண்பாடு வெளியுலகில் நுழையும் அளவு விரிவாகியுள்ளது.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040