• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தடையுரிமை பற்றிய சீனாவின் கருத்து
  2015-03-25 17:35:26  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கிக்கு அதிக ஆதரவுகள் கிடைக்கப் பெறும் வகையில் ஒரே வாக்குடன் கூடிய தடையுரிமையை சீனா கைவிட்டுள்ளது என்று அண்மையில் தகவல் வெளியானது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் கருத்து தெரிவித்தார். இவ்வங்கியின் முடிவெடுக்கும் அமைப்பு முறை குறித்தும் பங்கு வினியோகம் குறித்தும் தொடர்பான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இவ்வங்கியின் உறுப்பு நாடுகள் கொண்டிருக்கும் பங்குகளின் அளவானது, உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தால் குறையும். ஒரே வாக்குடன் கூடிய தடையுரிமையை சீனா நாடியுள்ளது அல்லது கைவிட்டுள்ளது என்ற கருத்து தவறானது என்று அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040