• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
7 நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
  2015-04-16 09:49:55  cri எழுத்தின் அளவு:  A A A   
உக்ரைன் நெருக்கடி, ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து 7 நாடுகள் குழுவின் வெளியுறவு அமைச்சர்கள் 15ஆம் நாள் ஜெர்மனியின் லுபேக் நகரில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், மேற்கூறிய பிரச்சினைகள் குறித்து 7 நாடுகள் குழு ஒத்துழைப்பு மேற்கொண்டு, உக்ரைன் நெருக்கடியைத் தீர்ப்பதில் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை தொடர்பான 6 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், ஈரான் ஆகியவை ஜுன் 30ஆம் நாளுக்கு முன் இறுதி பன்முக உடன்படிக்கையை உருவாக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்வதற்கு 7 நாடுகள் குழு ஆதரவளிக்கிறது என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040