வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் வெளியிட்ட சீனாவில் அன்னிய முதலீடு வெளியேறும் போக்கு குறித்து, ஷென்தான்யாங் பதிலளித்தார். அன்னிய முதலீடு வெளியேறுவது உண்மை தான். ஆனால், இத்தகைய வெளியேற்றம் பெரிய அளவில் காணப்படவில்லை என்று அவர் கூறினார். 2014ஆம் ஆண்டு, சீனாவில் 12 ஆயிரத்து 800 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. உலகில் மிக பெரிய முதலீடு செய்யப்படும் நாடாக, சீனா முதல் முறையாக மாறியுள்ளது என்று ஐ.நா வர்த்தக வளர்ச்சி மாநாடு இவ்வாண்டின் ஜனவரி திங்கள் வெளியிட்ட உலக முதலீட்டுப் போக்கு பற்றிய கண்காணிப்பு அறிக்கை கூறியது. ஷென்தான்யாங் இதைச் சுட்டிக்காட்டினார்.