• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பட்டுப்பாதையின் கட்டுமானப் பரவலுக்குச் சீனப் போக்குவரத்து அமைச்சகம் பொறுப்பு
  2015-04-16 16:46:39  cri எழுத்தின் அளவு:  A A A   
பட்டுப்பாதைப் பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆவது நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதையின் கட்டுமானத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், அதன் நெடுகிலுள்ள 60க்கும் மேலான நாடுகளுடன் அடிப்படை வசதிக் கட்டுமானம் தொடர்பான ஒத்துழைப்பை மேற்கொள்ளச் சீனப் போக்குவரத்து அமைச்சகம் பொறுப்பேற்கும். சீனப் போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஸ்யுச்சேன்குவாங் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் இதைத் தெரிவித்தார்.

முக்கிய சர்வதேசப் பாதையின் கட்டுமானத்தை முன்னேற்றுவது, போக்குவரத்தின் அடிப்படை வசதிக் கட்டுமானத்தை வலுப்படுத்துவது, சரக்குப் போக்குவரத்துத் தொழில்நிறுவனங்களின் வெளியே செல்லும் வளர்ச்சியை ஊக்குவிப்பது ஆகிய மூன்று துறைகள் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்துக்கு ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040