• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈரான் ஆணு ஆற்றல் பிரச்சினை பற்றிய பேச்சுவார்த்தைக்கு சீனா மேற்கொள்ளும் முயற்சி
  2015-05-06 18:52:51  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை குறித்து 12ஆம் நாள் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானும் திட்டமிட்டுள்ளதை சீனா கவனித்துள்ளது. தற்போது இப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தில் உள்ளது. பல்வேறு தரப்புகளும் இதற்காக தூதாண்மை முயற்சிகளை வலுப்படுத்தி வருகின்றன என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பல்வேறு தரப்புகளும் அரசியல் வழிகாட்டலில் ஊன்றி நின்று, தத்தமது கவனத்தை உரிய முறையில் கையாள வேண்டும். இது தொடர்பாக கூடிய விரைவில் முடிவெடுத்து, ஈரான் அணு ஆற்றல் பிரச்சினையைத் தீர்க்கும் வரலாற்றுப் போக்கை மனவுறுதியுடன் முன்னேற்ற வேண்டும் என்று சீனா விரும்புவதாக ஹுவா சுன்யிங் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040