• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய முதலீட்டு வங்கியின் விதிமுறை
  2015-05-22 17:17:44  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் 57 ஆரம்ப உறுப்பு நாடுகள் 3 நாட்கள் பேச்சுவார்த்தை மூலம் இவ்வங்கியின் விதிமுறை குறித்து உடன்பாட்டுக்கு வந்து, வரும் ஜுன் திங்கள் இறுதிக்குள் இவ்விதிமுறையில் கையொப்பமிடும்.

ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி உருவாக்கத்தின் ஆயத்தப் பணிக்கான 5ஆவது பேச்சுவார்த்தை பிரதிநிதிகள் கூட்டம் 22ஆம் நாள் சிங்கப்பூரில் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் காணப்பட்ட சாதனையை சீன நிதி அமைச்சகம் அதேநாள் வெளியிட்டது.

ஆயத்தப் பணி திட்டத்தின்படி, ஜுன் திங்கள் இறுதிக்குள் இவ்விதிமுறையில் பல்வேறு தரப்புகள் கையெழுத்திட்ட பின், உள்நாட்டு அனுமதிக்கான ஒழுங்குமுறையை நிறைவேற்றும். சட்டப்பூர்வ எண்ணிக்கையிலான அனுமதிகள் செல்லுபடியாகிய பின், இவ்வாண்டின் இறுதிக்குள் ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்படும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040