• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தேயிலை, பீங்கான், நாள்காட்டி போன்ற மலர்கள்
  2015-05-24 20:12:51  cri எழுத்தின் அளவு:  A A A   
ஹான் இனம், பழங்காலம் முதல் ஒளிமயமான பண்பாட்டையும் கலைகளையும் உருவாக்கியது. அரசியல், ராணுவம், தத்துவம், பொருளாதாரம், வரலாற்று இயல், இயற்கை அறிவியல், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில், நீண்டாகால செலவாக்கு வாய்ந்த பிரதிநிதிகளும் படைப்புக்களும் இந்த இனகத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய நிகழ்ச்சியில், ஹான் இனம் உருவாக்கிய தேயிலை, மருத்துவம், நாள்காட்டி போன்ற மலர்களைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்கின்றோம்.

முதலில், தேயிலை பற்றி கூறுகின்றோம்.

ஹான் இன மக்கள், தேனீர் குடிக்கும் வழக்கம், சீனாவின் ஷென்நாங் காலத்தில் தொடங்கியது. இப்பழக்கம், குறைந்தது 4,700 ஆண்டுகளுக்கு மேலாகக் காணப்படுகிறது. தேயிலையை அன்பளிப்பாக அளிக்கும் வழக்கத்தை, ஹான் இனத்தவர்கள் தொடர்கின்றனர். தேயிலையின் தாயகமாக சீனா கருதப்படுகிறது. தேயிலை உற்பத்தி, மற்றும் தேனீர் குடிப்பு ஆகியவையும் நீண்டகாலமாக இங்கு இருக்கின்றன. தேயிலை கலை, உலகளவில் புகழ்பெற்றது. டாங் வம்சக் காலத்தில், தேயிலைக் கலை ஜப்பானுக்கு புகுந்து பரவலாகத் தொடங்கியது.

பழங்காலத்தில் ஹான் இனம் உற்பத்தி செய்த தேயிலை புகழ்பெற்று, உலகச் சந்தையில் வெளிநாட்டவர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பட்டது. சீனாவின் தென்மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. குறிப்பாக, பழைய தேயிலைப் பாதை மற்றும் பட்டுப் பாதை மிகவும் புகழ்பெற்றது.

அடுத்து, பீங்கான் தயாரிப்பு பற்றி கூறுகின்றோம்

பீங்கான் தயாரிப்பில் சீனா முதன்மையாக உள்ளது. பீங்கான், ஹான் இன மக்களின் முக்கிய படைப்பு. மிக முன்னதாக தயாரிக்கப்பட்ட பீங்கான் பொருட்கள் இதுவரை 4,200 ஆண்டுகால வரலாறு உடையது. பழைய பட்டுப் பாதையில், பட்டு, தேயிலை ஆகிய பொருட்களைத் தவிரவும் பீங்கான் பொருட்கள் அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிச் செய்யப்பட்டன. ஹாங் இனம் பீங்கான் தயாரிக்கத் தொடங்கிய காலம், சீன நாகரிகத்தில் முக்கிய பகுதி ஆகும். உலகில் நான்கு பெரிய பழைய நாகரிகங்களில் ஒன்றாகும் சீனா, மனித சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை ஆற்றி வருகிறது. இதற்கிடையில், பீங்கான் பொருட்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, மிக மிக தனிச்சிறப்புத் தன்மை வாய்ந்த்து. சீன வரலாற்றில் பல்வேறு வம்சக் காலங்களில், பீங்கான் தயாரிப்பு தொடர்பாக வேறுபட்ட தொழில் நுட்பங்களும் கலைத் தனிச்சிறப்புகளும் தோன்றின. ஆங்கில மொழியில், 'CHINA' என்ற சொல், சீனா நாடு என்றும் பீங்கான் என்றும் பொருள் இருக்கிறது.

அடுத்து, ஹான் இனத்தின் நாள்காட்டி பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்

மிக மிக முன்னதாகவே ஹான் இனத்தின் மூதாதையர், காலக்கணக்கு முறையை உருவாக்கிப் பயன்படுத்தினர். சியா, யின், சோ, சின், கான் ஆகிய பழைய வம்சங்களில் நாள்காட்டி உருவாக்கப்பட்டது. இதில், சந்திர நாள்காட்டியும் சூரிய நாள்காட்டியும் இணைந்து பயன்படுவது வழக்கம். தற்போது, ஹான் இனம் தொடர்ந்து இந்த பாரம்பரிய வழக்கத்தைப் பயன்படுத்தி வருகிறது. அதேசமயம், உலகின் பல நாடுகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் சூரிய நாள்காட்டியையும் ஹான் இனம் பயன்படுத்தி வருகிறது.

அடுத்து, ஹான் இனத்தின் ஃபெங் சுய் கொள்கை பற்றி சுருக்கமாக சொல்கின்றோம்.

ஃபெங் சுய் என்பது, மனிதருக்கும் இயற்கைக்கும் இடையேயான வாழ்வியல் தொடர்புடையது. இது, சீனாவில் நீண்டகாலமாக வளர்ந்து வருகிறது. ஃபெங் சுய் கருத்து ஒரு மூட நம்பிக்கையானகது என்று சிலர் கருதுகின்றனர். நடைமுறையில், அது, இயற்கையை கண்டறிந்து, இயற்கையின் உள்ளதங்களை கண்டறிந்து பயன்படுத்தும் கொள்கை ஆகும்.பழங்கால்தில், ஃபெங் சுய் கொள்கைகளை பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்திய ஹான் இன மக்களிடையே, இதன் மூலமாக வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வழக்கமும், உடல் மற்றும் மன நலத்துடன் வாழும் வழக்கமும் உள்ளன.

அடுத்து, ஹான் இனத்தின் மருத்துவம் பற்றி கூறுகின்றோம்

சீனப் பாரம்பரிய மருத்துவம், ஹான் இனத்தின் மருத்துவ நடைமுறையை அடிப்படையாக கொண்டு உருவாக்கி வளர்ந்துள்ள பாரம்பரிய மருத்துவங்களில் ஒன்றாகும். யின்யாங் மற்றும் வூசிங் ஆகிய இரண்டு கொள்கைகளும் சீன மருத்துவயியலில் மிக முக்கிய மருத்துவ சிந்தைனையாகும்.

கூறிய பரப்பளவில், சீனப் பாரம்பரிய மருத்துவம், ஹான் மருத்துவம் தான். 1949 ஆண்டுக்கு முன்பு, ஹான் மருத்துவம் என்ற சொல் பரவலாக காணப்பட்டது. ஜப்பான், தென்கொரியா, வடகொரிய ஆகிய நாடுகளில் பாரம்பரிய மருத்துவம், ஹான் மருவத்துவத்தின் அடிப்படையில் வளர்ந்துள்ளது எனக் கருதப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040