• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் புகழ்பெற்ற சிந்தனையாளர்கள்
  2015-05-27 19:13:56  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனா, பழைய நாகரிகம் கொண்ட நாடு ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே. சீனாவில் பழங்காலத்தில் பல்வகைச் சிந்தனைகள் பிறந்தன. அதில், கன்ஃபூசியஸ் சிந்தனை, உலகளவில் புகழ்பெற்றது. அதைத் தவிரவும், டாவோயிஸம் முதலிய பிற கொள்கைகள் இடம்பெற்றுள்ளன.

இன்றைய சீனத் தேசிய இனங்கள் நிகழ்ச்சியில், ஹான் இனத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சிந்தனையாளர்கள் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

முதலில், கன்ஃபூசியஸ் பற்றி கூறுகின்றோம்

உலகளவில் பரலவாக பேசப்பட்ட கன்ஃபூசியஸ் என்பவர், சீன மொழியில் காங்ட்ஸ் எனவும் அழைக்கப்படுகிறார்.

சீனாவின் வசந்த மற்றும் இலையுதிர் காலத்தில் அதாவது, கிமு 551 முதல் கிமு 479 வரை வாழ்ந்த அவர், சீனச் சிந்தனையாளரும், கல்வியியலாளரும், சமூக மெய்யியாளரும் ஆவார். இவருடைய மெய்யியல் சிந்தனைகள், தனி மனிதன் நன் நடத்தை, சமூகத் தொடர்பு, நீதி, நேர்மை முதலிய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுத்தின. கன்ஃபூசியஸின் சிந்தனைகள், கன்ஃபூசியசியம் எனும் மெய்யியல் முறைமையாக வளர்ச்சி பெற்றது. இந்த சிந்தனைகள், சீனாவில் மட்டுமல்லாமல், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளிலும் ஆழமான செல்வாக்குச் செலுத்தின. தற்போது, உலகின் 10 பண்பாட்டாளர்கள் என்ற பெயர் பட்டியலில் முதன்மைப் பெற்றவர், கன்ஃபூசியஸ் என்பது குறிப்பிடத்தக்கது. கன்ஃபூசியஸின் சிந்தனைத் தொகுப்பு, தற்போது உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்து, மென்சியஸ் பற்றி கூறுகின்றோம்

மென்சியஸ், சீன மொழியில் மெங் ஸி என பரவலாக அழைக்கப்படுகிறார். சீனாவின் போரிடும் நாடுகள் காலத்தில் அதாவது, கிமு 372 முதல் கிமு 289 வரை வாழ்ந்த அவர், சிறந்த சிந்தனையாளரும், கல்வியியலாளரும், கன்ஃபூசியஸ் கொள்கையின் பிரதிநிதியும் ஆவர். கன்ஃபூசியஸ் மற்றும் மென்சியஸ் இருவரும் இணைந்து 'குன்மென்' என சுருக்கமாக அழைக்கப்படுகின்றனர். இவருடைய படைப்புகள், பள்ளிகளின் பாடப் புத்தகங்களில் தேர்வு செய்யப்பட்டன.

கன்ஃபூசியஸின் சிந்தனைகள் தொடர்ந்து வளர்ந்த நிலையில், மென்சியஸ் தனது கருத்துக்களை வெளியிட்டார். கன்பூசியஸை போல, இவர், தனது அரசியல் முன்மொழிவுகளை செயல்படுத்த விரும்பினார். ஆனால், அவை நடைமுறைக்கு வரவில்லை.

அடுத்து, லாவோட்ஸ் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

லாவோ ஸ், கிமு 571 முதல் கி மு 471 வரை இருந்தனர். சீனப் பழங்காலத்தில் புகழ்பெற்ற மெய்யிலாளரும், சிந்தனையாளரும், டாவோ மதத்தை உருவாக்கியவரும் ஆவர். உலகின் புகழ்பெற்ற பண்பாட்டாளர் மற்றும் உலகின் 100 வரலாற்றுப் புகழ்பெற்றவர்களில் ஒருவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. லாவோஸின் சிந்தனை, சீன மெய்யியலின் வளர்ச்சிக்கு ஆழந்த செல்வாக்கை ஏற்படுத்தியது. அவர் டாவோ மதத்தின் முதலவர் என்ற பெயரிட்டு அழைக்கப்படுகிறார்.

அடுத்து, சாவங்ட்ஸ் பற்றி தொடர்கின்றோம்

சாவங்ஸ் என்பவர், சீனாவின் போரிடும் நாடுகள் காலத்தின் நடுப்பகுதியில் வாழ்ந்த சிந்தனையாளரும், மெய்யியலாளரும், எழுத்தாளரும் ஆவர். சீன தத்துவ பிரிவுகளில் ஒன்றான சாவங் கொள்கையை, அவர் தொடங்கினார். டாவோவிஸத்தின் முக்கிய பிரதிநிதிகளில் ஒருவராகவும் திகழ்ந்தார். இவருடைய படைப்பு, தனிச்சிறப்புமிக்கது. இலக்கியத்தில் உள்ள மெய்யியலும், மெய்யியலில் உள்ள இயக்கியமும் என்ற பாராட்டு கிடைத்தது.

அடுத்து, மோட்ஸ் பற்றி கூறுகின்றோம்

சீனாவின் வந்சத மற்றும் இலையுதிர் காலத்தின் இறுதி முதல் போரிடும் நாடுகள் காலத்தின் துவக்கம் வரை வாழ்ந்த மோட்ஸ் என்பவர், சிந்தினையாளரும், கல்வியியலாளரும், அறிவியாளரும், ராணுவ வல்லூநரும் ஆவார். சீன வரலாற்றில் விவசாயக் குடும்பத்தில் இருந்து பிறந்த ஒரே மெய்யியலாளர், மோ டஸ் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. மோ-ட்ஸ் இயல் என்ற சிந்தனையை அவர் உருவாக்கினார். இந்த சிறந்த சிந்தனை, ச்சின் வம்சத்திற்கு முந்தைய காலத்தில் பெரும் செல்வாக்கை செலுத்தியது. மேலும், போரிடும் நாடுகள் காலத்தில், வடிவியல், ஒளியியல், இயற்பியல் ஆகிய துறைகளை தொடங்கிய அவர், சிறந்த சாதனைகளை பெற்றார். அப்போது பல்வகை சிந்தனைகள் தோன்றி போட்டியிட்ட சூழ்நிலையில், கன்ஃபூசியஸ் அல்லாமல் மோட்ஸ் சிந்தனை தான், புகழ் பெற்றது.

அடுத்து, ஷுன் ட்ஸ் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்

ஷுன் ட்ஸ், போரிடும் நாடுகள் காலத்தின் இறுதியில் அதாவது கிமு 313 முதல் கிமு 238 வரை வாழ்ந்தவர் ஆவார். இவர், சிறந்த சிந்தனையாளரும், இயக்கியவியலாளரும், அரசியலாளரும் ஆவார். கன்ஃபூசியஸ் சிந்தனைகளின் அடிப்படையில் அதனை வளர்க்க அவர் முயற்சிகளை செய்தாக தெரிகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040