• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கரடியை பயமுறுத்திய பயமில்லா மனிதர்
  2015-05-27 19:54:17  cri எழுத்தின் அளவு:  A A A   

கரடியை மிருகக் காட்சி சாலையிலோ அல்லது தொலைக்காட்சிப் பெட்டியிலோ பார்க்கும்போது நமது இதயத்துடிப்பின் வேகம் எப்போதும்போலத்தான் இருக்கும். ஆனால், அதனை நேருக்குநேர் பார்த்தோமேயானால்தான் நமது தைரியம் புலப்படும். அத்தகைய நேரங்களில் பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பதுதான் மிகவும் முக்கியம்.

அப்படி, திடீரென கரடி தன்முன் தோன்றியபோதும், சிறிதும் அச்சப்படாமல், 6ஆவது அறிவைப் பயன்படுத்தி உயிர் பிழைத்துள்ளார் ஸ்வீடனைச் சேர்ந்த ரால்ப் பெர்ஸ்ஸன்.

தனது செல்லப் பிராணியான நாயுடன் வெளி உலா சென்றிருந்தபோது, எதையோ பார்த்து நாய் பயம் கலந்த உணர்வுடன் குரைத்துள்ளது. அதனை என்னவென்று பார்க்க சென்றுள்ளார் பெர்ஸ்ஸன். அப்போது, காட்டினுள் மறைந்திருந்த கரடி ஒன்று அவரை நோக்கி ஓடி வந்தது. அப்போது, நாய் என்ன செய்ததென்று தெரியவில்லை. ஆனால், பெர்ஸ்ஸன் தனது சமயோசித புத்தியைப் பயன்படுத்த திட்டமிட்டார். கரடி நெருங்கி வரும் வேளையில் கைகள் இரண்டையும் விரித்து, மிகவும் உரக்கக் குரலில் கத்தத் தொடங்கினார். இதை சிறிதும் எதிர்பாராத கரடி, பயந்து, அப்படியே ஓடிவிட்டது.

இந்த சம்பவம் குறித்து பெர்ஸ்ஸன் கூறுகையில், கரடியைப் பார்த்தவுடன் என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உரக்கமாகக் கத்தி, என்னை பெரியவனாகக் காட்டிக் கொண்டேன். விலங்குகளைப் பார்த்தவுடன், இறந்தவரைப் போல கீழே விழுந்து நடித்து தப்பித்துக் கொள்ளும் நுணுக்கத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. கரடியை எப்படி பயப்படுத்துவது என்பதை பறவைகளிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன். கொக்குகள் தனது இறக்கைகளை விரித்து கரடியை பயமுறுத்தியை காட்சிகளை கண்டுள்ளேன். அதனால், நான் பயப்படவில்லை என்று தெரிவிக்கிறார்.

இந்த நிகழ்வுகள் அனைத்தையும் அவரது மனைவி லீனா பெர்ஸ்ஸன் படம் பிடித்துள்ளார். அதனை, தற்போது இணையதளங்களில் பெரும்பாலானோர் பார்த்து வருகின்றனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040