• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இணையம்+
  2015-05-27 20:35:08  cri எழுத்தின் அளவு:  A A A   

மார்ச் திங்களில் நிறைவடைந்த சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரில் சீன அரசவையின் பணியறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இணையம் + என்ற சொல் முதன்முதலில் இவ்வறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இணையம் + என்றால் என்ன? சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் இது எந்த வகையில் பயன் தர முடியும்?

இணையம் + என்பது புதிய காலத்தில் இணையத் துறையின் வளர்ச்சியாகும். அதாவது, பல்வகை உற்பத்தி துறைகளில் இணையத்தின் மேம்பாடுகளைத் தொகுத்து வெளிபடுத்தி, அதன் புதிய முன்னேற்றங்களை பொருளாதார துறையில் சிறப்பாகப் பயன்படுத்துவதாகும். அதன் மூலம் பல்வகை உற்பத்தி துறைகளின் புத்தாக்க ஆற்றலையும் உற்பத்தி ஆற்றலையும் உயர்த்த முடியும். மேகக் கணிமை, பொருள் இணையம்?, மாபெரும் தரவுகள் large-data முதலியவற்றைப் பிரதிநிதியாகக் கொண்ட புதிய தலைமுறை தகவல் தொழில் நுட்பத்தையும் நவீன ஆக்கத் துறை, உற்பத்தி தன்மை வாய்ந்த சேவைத் துறை ஆகியவற்றையும் இணையம் + என்பது இணைக்கலாம்.

டன்சென்ட் கூட்டு நிறுவனத்தின் ஆளுநர் குழுத் தலைவரும் முதன்மை நிர்வாக அதிகாரியுமான மா ஹுவா டண் நடப்பு தேசிய மக்கள் பேரவையின் பிரிதிநிதியும் ஆவார். இவ்வாண்டு அவர் 4 கருத்துருக்களை முன்வைத்தார். அவற்றில் ஒன்று இணையம் + தொடர்புடையது. இணையம் + என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய உந்து விசையாகவும் பாரம்பரிய தொழில்களைச் சீர்செய்வதற்கான பயன் தரும் வழிமுறையாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கருதுகின்றார். அரசுச் சேவை, மருத்துவ சிகிச்சை, கல்வி முதலிய பொது சேவைகள் இணையத்துடன் இணைந்து மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

மார்ச் திங்கள் சீனத் தலைமை அமைச்சர் லீ கேச்சியாங் வழங்கிய அரசுப் பணியறிக்கையில், புதிய தொழில்களின் வளர்ச்சிக்காக அரசு 4000 கோடி யுவான் வழிகாட்டு நிதியை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையம் + என்ற துறையில், இணையம் கூடுதல் சில்லறை விற்பனை துறை, இணையம் கூடுதல் தொழில்துறை, இணையம் கூடுதல் நிதித் துறை ஆகியவை இடம்பெறும். சுறுக்கமாக கூறின், இணையம் + என்பதற்கு, இணையமும் பாரம்பரிய தொழில்களின் இணைப்பு ஆகும்.

யீகுவான் சர்வதேசக் கூட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் யூ யாங் இணையம் + பற்றி கருத்து தெரிவிக்கையில், இணையம் + என்பது சீனாவில் பொருளாதாரக் கட்டமைப்பைச் சீராக்குவதுடன் அதனுடன் அதனுடன் நெருக்கமாகத் தொடர்புடையது என்று கூறினார். தற்காலத்தில், சிறிய தொழில் நிறுவனங்கள் முதல் வளர்ந்து நாடுகள் வரை, அவற்றின் சீராக்கும் போக்கில் இணையம் இன்றியமையாதது. ஒவ்வொரு தொழில் நிறுவனமும் சொந்த இணைய + வடிவத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.

தற்போது, இணையம் + 3ஆவது அதாவது சேவைத் துறையில் பன்முகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இணைய நிதி, இணைய போக்குவரத்து, இணையக் கல்வி முதலிய புதிய துறைகள் தோன்றியுள்ளன. அதேவேளையில், முதலாவது மற்றும் இரண்டாவது துறைகளில் இணையம் வேகமாக நுழைந்துள்ளது. எடுத்துக்காட்டாகத் தொழில்துறையில் சாதனத் தயாரிப்பு, எரியாற்றல், புதிய பொருள் முதலிய துறைகளில் இணையம் பரவலாகக் காணப்படுகிறது.

கடந்த ஆண்டு அலிபாபா குழுமம் புதிய கிராமப்புற நெடுநோக்குத் திட்டத்தை வகுத்து செயல்படுத்தியுள்ளது. சீனாவில் 60 கோடிக்கு மேலான மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். செல்லிட இணையத்தை அவர்கள் பயன்படுத்தினால், மேலும் பெரியதொரு அலிபாபா மற்றும் தாவ்பாவை உருவாக்கலாம் என்று இக்குழுமத்தின் முதன்மை நிதி அதிகாரி லு ட்சாவ் சீ கூறினார். முதல் கட்டத்தில், வேளாண் உற்பத்தி பொருட்கள் இணையம் மூலம் நகரங்களில் விற்பனை செய்யலாம். இரண்டாவதாக, நகரவாசிகள் பயன்படுத்தும் அன்றாட பொருட்கள் கிராமப்புறங்களில் விற்பனை செய்ய முடியும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

பொதுச் சேவைத் துறையில் இணையம் மேலதிக பயன் தரமுடியும். ஆன்லைன் கல்வி வசதிமூலம், கல்வி மூலவளம் பற்றாக்குறை பிரச்னை நிலவும் புறப் பகுதியில் முன்னேறிய கல்வி வாய்ப்பைப் பெறலாம். தவிர, தற்போது இணையத் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ஸ்மாட் மருத்துவ வசதி மக்களுக்குச் சேவை புரிகின்றது. மக்கள் இணையம் மூலம் மருத்துவரைப் பார்க்க முன்னதாக பதிவு செய்யலாம். அதே போன்ற இணைய வசதிகள் மருத்துவ சிகிச்சைச் சேவையின் பயனை அதிகரிப்பது உறுதி.

இணையம் + துறையின் எதிர்காலம் மீது சீன அரசு மற்றும் அதிக தொழில் முனைவோர்கள் முழு நம்பிக்கை தெரிவித்துள்ளன. இருந்தபோதிலும் அதன் வளர்ச்சி அவ்வபோது அறைகூவல்களை எதிர்நோக்குகின்றது.

சீனாவில் விசேட் என்பது ஃபேஸ் புக் போன்ற ஒரு வகை இணைய உரையாடல் வசதியாகும். இணையம் மூலம் மக்கள் வசதியாக உரையாடலாம், படம்,ஒலி மற்றும் காணொலியை அனுப்பலாம். ஆகவே, முன்பு பரவலாக பயன்படுத்தப்படும் குறுங்தகவல் சேவையை மக்கள் படிப்படியாக கைவிட்டுள்ளனர். அதனால், செல்லிடக் கூட்டு நிறுவனத்தின் வருமானமும் குறைந்துள்ளது. பின்னர், தகவல் பரிமாற்றம் மூலம் லாபம் கிடைக்க முடியும் என்று செல்லிடக் கூட்டு நிறுவனம் கண்டுபிடித்தது. இப்பகுதியின் அதிகரிப்பு குறுங்தகவல் சேவை இழப்பைப் பெரிதும் தாண்டியுள்ளது.

ஆகவே, இணையம்+ என்பது மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். மட்டுமல்ல, இணையம் பரவலுக்குத் துணை புரியும் வகையில் இணைய அடிப்படை வசதி மற்றும் data அடிப்படை வசதியை மேம்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040