• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இளைஞர்களின் புத்தாக்க எழுச்சி
  2015-05-28 16:43:33  cri எழுத்தின் அளவு:  A A A   

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன், சீனாவில் பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அவ்வளவு அதிகமாக இல்லை. பொதுவாக தொடர்புடைய அரசு வாரியங்கள் அவர்களுக்கு ஒரு வேளை வாய்ப்பை ஏற்பாடு செய்வதுண்டு. அரசு வாரியங்கள் அல்லது அரசு சார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைப்பது இளைஞர்களின் விருப்பமாகும். அவ்வளவு கடினமில்லை. இளைஞர்களின் கல்வியறிவு மற்றும் கல்வி பட்டம் மென்மேலும் உயர்வதுடன் குறிப்பாக பெரிய நகரங்களில் ஒரு வேலை வாய்ப்பைப் பெறுவது ஒரு பிரச்சினையாகிவிட்டது. தற்போதைய நிலைமை எப்படி, இளைஞர்கள் இப்பிரச்சினையை எவ்வாறு சமாளிப்பது? இன்றைய நிகழ்ச்சியில் உங்கள் கேள்விக்குப் பதிலளிக்கின்றேன்.

சுங்குவான்சுன் எனும் இடம் முன்னதாக பெய்ஜிங் மாநகரில் ஒரு புறப்பகுதியாகும். ஆனால், கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளின் துவக்கம் முதல் இது கணினித் தொழில் நுட்பம் மற்றும் திறமைசாலிகள் திரண்டுள்ள இடமாக மாறி வருகிறது. விரைவில் நாடளவிலும் புகழ்பெற்று, சீனாவின் சிலிகான் வேலி என்று இது அழைக்கப்படுகிறது.

இந்த வசந்த விழாக் காலத்தில் சூ பாவ்நான் எனும் இளைஞரைப் பொறுத்த வரை அவரது தொழில் திட்டப்பணி மிக முக்கிய வளர்ச்சி தருணத்தில் உள்ளது. ஆகவே பெரும்பாலானோரைப் போல் அவர் இவ்விழாவிற்கு சொந்த ஊருக்குத் திரும்பவில்லை. அவரைப் போல் பல இளைஞர்கள் சுங்குவான்சுன் இடத்தில் கனவை நிறைவேற்றப் பாடுபட்டு வருகின்றனர்.

21ஆவது நூற்றாண்டின் 30ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் ஸ்டேன்ஃபர் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர் சொந்த வீட்டின் வாகனக் கூடத்தை தனது மாணவர்களுக்கு ஆய்வகமாக மாற்றி கொடுத்தார். இந்த வாகனக் கூடத்தில் எச் பி நிறுவனம் ஆரம்பித்த்து. தற்போது, இது சிலிகான் வேலியின் ஆரம்ப இடம் என்று கருதபட்டு வரலாற்றுச் சின்ன இடமாக மாறியுள்ளது.

கூகுள், ஆப்பிள், எமசன் முதலிய உலகத் தலைச்சிறந்த கூட்டு நிறுவனங்கள் வாகனக் கூடங்களிலிருந்து ஆரம்பித்து வளர்ச்சி பெற்றுள்ளன. இவற்றின் சாதனை பல தலைமுறை இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்துள்ளன.

பெய்ஜிங்கிலுள்ள சுங்குவான்சுன் பிரதேசத்தில் சராசரியாக நாள்தோறும் 36 புதிய கூட்டு நிறுவனங்கள் துவங்குகின்றன. தற்போது, கணினித் தொழில் நுட்பம் மற்றும் கணினி வசதிகளைத் தவிர, தொழிலை ஆரம்பித்து நடத்துவதற்கான சேவை புதிதாக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த ஜுன் திங்கள் சுங்குவான்சுனில் ஒரு சாலையின் துவக்க விழா நடைபெற்றது. 300 மீட்டம் மட்டும் நீளமுடைய இச்சாலையில் 2000க்கு மேலான Angel Investor என்னும் முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள், 20க்கு மேலான புதிய புத்தாக்க நிறுவனங்கள், சுமார் 4000 வளர்ந்து வரும் புதிய கூட்டு நிறுவனங்கள் முதலியவை உள்ளன. இதுவரை கிட்டத்தட்ட 120 புதிய கூட்டு நிறுவனங்கள் நிதியுதவியைத் திரட்டுள்ளன. நிதியுதவித் தொகை சராசரியாக 50 இலட்சம் யுவானாகும்.

இச்சாலையில் ஒரு சிறிய உணவுவிடுதியில் 2ஆவது மாடியில் கேலாஜ் காப்பி எனும் காப்பியகம் 2011ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் இயக்குநர் சூ ஷாவ் என்பவர். அவர் முன்பு ஒரு பெரிய பங்குப்பதிர கூட்டு நிறுவனத்தின் முதலீட்டு இயக்குநராவார். பதவி விலகிய பின் அவர் இந்தச் சிறிய காப்பியகத்தை ஆரம்பித்தார். வாகனக் கூடத்திலிருந்து வளர்ச்சி துவங்கிய தொழில் முனைவோருக்கு மதிப்பு தெரிவிப்பது தான் கேலாஜ் என்ற பெயரை தேர்ந்தெடுத்துவதற்கான காரணமாகும்.

இந்தக் காப்பியகத்தில் நீங்கள் 20 யுவான் மதிப்புள்ள ஒரு கோப்பை காப்பி வாங்கினால், நாள் முழுவதும் இங்கே ஒரு மேசை பயன்படுத்தலாம். கேலாஜ் காப்பியகம் 24 மணி நேரமாக இயங்கும். வாடிக்கையாளர்களுக்கு அச்சு, ஒளிப்படம், நகல் போன்ற சேவை வழங்குகின்றது. தவிர, நேரப்படி முதலீடு மற்றும் தொழில் நடத்துவது பற்றி கருத்தரங்குகளை நடத்துகின்றது.

சாதாரண நாளிலும் இந்த 800 சதுர மீட்டருடைய காப்பியகத்தில் மக்கள் கூட்டக் கூட்டமாக இருப்பர். இங்கே ஒரு இருக்கையை தேடிப்பிடிப்பது கடினமாகும். உரையாடல், தட்டச்சு, காப்பி கோப்பை முதலிய சத்தம் இந்த அறையில் கேட்டுக்கொண்டே இருக்கும்.

ஃபு ட்சியாங் என்ற இளைஞர் இங்குள்ள வாடிக்கையாளர்களில் ஒருவராவார். கடந்த ஆண்டு கோடைக்காலம் அவர் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற பின், நண்பர்களுடன் ஒரு வர்த்தகக் கூட்டு நிறுவனத்தை ஆரம்பித்தார்.

கேலாஜ் காப்பியகத்தை மிகவும் பிடிக்கும் என்று அவர் கூறினார். இங்கே ஒத்த கருத்துக்களைக் கொண்ட நண்பர்களைக் கண்டுகளிக்கலாம். இணையச் சிந்தனை மூலம் தொழில் நடத்துவது பற்றி அறிவுகளை இங்கே கற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வே சிங்சென் என்பவர் 30 வயத்துக்கு மேலானவர். 4 ஆண்டுகளுக்கு முன் அவர் பதவியிலிருந்து விலகி, பெய்ஜிங்கிற்கு வந்தார். மனக்கிளர்ச்சியைக் கண்டறியும் ஏஜின் எனும் சேவையில் அவர் ஆரம்பித்து ஈடுபட்டு வருகின்றார். இந்தச் சேவை என்பது மனிதரின் முகத்தை ஸ்கேன் செய்வதன் அடிப்படையில் இந்த நபரின் மனக்கிளர்ச்சி ஆராய்ந்து உரிய பாடலை வழங்குவதன் மூலம் அவருக்கு அமைதியை கொண்டு வரலாம். இந்தச் சேவை இதுவரை 12 இலட்சத்துக்கு மேலான மக்களுக்கு புரிந்துள்ளது.

மனக்கிளர்ச்சி பயன்பாடு என்ற வே சிங்செனின் கருத்து ஐரோப்பாவின் அறிவியல் தொழில் நுட்பத் துறையில் செல்வாக்கு மிகுந்த 2014 ஸ்ராஷ் உச்சிமாநாட்டில் முதலிடம் பெற்றுள்ளது. மனிதர் மனக்கிளர்ச்சி பற்றிய பெரிய தரவுக் கிடங்கை நிறுவ வே சிங்சென் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் துணை வெளியுறவு அமைச்சர் னொவேலி, யூ தியூப் எனும் காணொலி இணையத்தின் இயக்குநர் சென் ஷ்ச்சுன் முதலியோர் இச்சாலையில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

2014ஆம் ஆண்டின் இறுதியில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சர் லு வேய் தனது அமெரிக்கப் பயணத்துக்கு முன், சிறப்பாக சுங்குவான்சுனுக்கு வந்துதொழில் நடத்தும் சுமார் 30 பேருடன் இரு மணி நேரம் விவாதித்தார். அமெரிக்காவில் நடைபெற்ற சீன-அமெரிக்க இணையக் கருத்தரங்கில் அவர் உரை நிகழ்த்துகையில், அமெரிக்க இளைஞர்களை சுங்குவான்சுனக்கு வர அழைப்பு விடுத்தார்.

2014ஆம் ஆண்டின் இறுதி வரை, சீனாவின் பெருநிலப்பகுதியில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியுள்ளது. பெய்ஜிங் மாநகரில் மட்டும் இணைய மூல விற்பனை தொகை கடந்த 4 ஆண்டுகளில் 12 மடங்காகி, 2010ஆம் ஆண்டு இருந்த 1200 கோடி யுவானிலிருந்து 2014ஆம் ஆண்டு 14 ஆயிரத்து 600 கோடி யுவானாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040