• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் இனம்
  2015-06-03 17:04:15  cri எழுத்தின் அளவு:  A A A   

திபெத் இனம் அதிகமாக ச்சிங்காய்-திபெத் பீடபூமியில் பரவியுள்ளது. இந்த தேசிய இன மக்கள், சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்திலும், ச்சிங்காய், கான்சூ, சிச்சுவான், யுன்னான் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் அடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். திபெத் பண்பாடு உள்ளிட்ட மலர்கள் முன்னதாக எமது சீன வானொலி தமிழ்ப் பிரிவின் பிற நிகழ்ச்சிகளிலும் பலமுறை ஒலிபரப்பப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் திபெத் இனத்தின் வரலாறு, மொழி, எழுத்து ஆகிய மலர்களை முக்கியமாக கூறுகின்றோம்.

முதலில், திபெத் இனத்தின் வரலாறு பற்றி

திபெத் என்பது, திபெத் மொழியில் போ என அழைக்கப்படுகின்றது. குறிப்பாக, பல்வேறு பகுதிகளில் வாழும் திபெத் மக்களுக்கு வேறுபட்ட கூற்றுக்கள் உள்ளன.

திபெத் இனம், நீண்டகால வரலாற்றைக் கொண்ட இனம். திபெத் இனம், பழங்காலத்தில் யர்லுங் ட்சாங்போ ஆற்றின் மத்திய பகுதியில் உள்ள ஒரு வேளாண்மை பழங்குடியாக தோன்றி வளர்ந்த இனமாகும். 4000 ஆண்டுகளுக்கு முன்பு, திபெத் இனத்தன் மூதாதையர்கள் யர்லுங் ட்சாங்போ ஆற்றின் பரப்பளவில் வாழ்ந்தனர். 1300க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு, டாங் வம்சத்தின் இளவரசியும் அப்போதைய திபெத் மன்னரும் திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, திபெத் மற்றும் ஹான் இனங்களுக்கிடையேயான பண்பாட்டுப் பரிமாற்றத்திற்கான புதிய அத்தியாயம் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. ச்சிங் வம்சத்தின் காங் ஷி ஆண்டுக்காலம் தொடங்கி, திபெத் என்ற தற்போதைய பெயர், சூட்டப்பட்டது. இந்நிலையிலேயே, திபெத் இனம் என்ற பெயர் கிடைத்துள்ளது.

அடுத்து, திபெய் மொழி மற்றும் எழுத்து பற்றி.

திபெத் இனம், தனக்கென்று தனித்த சொந்த மொழியைக் கொண்டுள்ளது. திபெத் மொழி, சீன-திபெத் மொழியின் ஒரு கிளை. திபெத் மொழியில் 3 பேச்சு வழக்குகள் உள்ளன. திபெத் எழுத்துக்கள், 7-வது நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றின. உச்சரிப்புமுறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எழுத்து முறை இதுவாகும். திபெத் மொழியில், 4 உயிரெழுத்துக்களும் 30 மெய்யெழுத்துக்களும் இடம்பெறுகின்றன. இடது இருந்து வலதுக்கு கை எழுதுவது வழக்கம். 2 எழுத்து வடிவங்கள் இருக்கின்றன என்று தெரிகிறது.

அடுத்து, திபெத் இனத்தின் நாள்காட்டி பற்றி

சந்திரன் நாள்காட்டியையும் சூரியன் நாள்காட்டியையும் இணைத்து, திபெத் இனம் பயன்படுத்தி வருகிறது. தவிர, மரம், தீ, நிலம், உலோகம், நீர் ஆகிய ஐந்து கொள்கைகளும் யின்யாங் கொள்கையும் நாள்காட்டி முறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இம்முறையில், 60 ஆண்டுக் காலம் ஒரு சுழற்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040