• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மங்கோலிய இனம்
  2015-06-17 16:13:09  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆரம்பத்தில், மங்கோலியா, ஒரு பழங்குடியின் பெயர் மட்டும். படிப்படியாக, அது, புதிய தேசிய இனத்தின் பொதுவான பெயராக மாறியது.

மங்கோலிய இனத்தின் வரலாறு, சீனாவின் டாங் வம்சக் காலத்தின்போது தொடங்கியது. அப்போது, ஹுலுன் ஏரி மற்றும் ஆர்குன ஆற்றின் தென்கிழக்கின் பரப்பில், மென்வூஸிவெய் எனும் பழங்குடியினம் வசித்து வந்தது. இந்த பழங்குடியினம், மங்கோலிய இனத்தின் மூதாதையராக கருதப்படுகிறது. பாரசீக மொழியில் எழுதப்பட்ட ஒரு வரலாற்று ஆவணத்தில் உள்ள கதையின்படி, ஆர்குன ஆற்றுப் பள்ளத்தாக்கு, மங்கோலிய இனம் தோன்றிய இடம் ஆகும்.

பிறகு, மங்கோலிய பழங்குடி, கிழக்கில் இருந்து மேற்கு பகுதிக்கு இடம்மாறியுள்ளது. காட்டுப் பகுதியில் இருந்து புல்வெளிப் பகுதியை அடைந்துள்ள இந்த பழங்குடி, நாடோடி வாழ்க்கையை தொடங்கியுள்ளது.

மங்கோலிய இனம், நீண்டகால வரலாறு மற்றும் ஒளிமயமான பண்பாடு உடையது. பேச்சு வழக்கில், மங்கோலிய இனம், 3,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது. எழுத்துப் பதிவுகளின்படி, அது, குறைந்த்து 1,000 ஆண்டுக்களுக்கு மேலான வரலாறு உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, மங்கோலிய இனத்தின் மிக முக்கிய கொண்டாட்ட விழா பற்றி விரிவாக கூறுகின்றோம்.

ஆண்டுதோறும், ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில், புல்வெளியில் பச்சை நிறம் நிறைந்திருக்கிறது. பல்வகை பூக்கள் மலர்ந்து இருக்கின்றன. முன்பு அமைதியான சூழ்நிலை இருந்த புல்வெளியில் இக்காலத்திலேயே உயிர் ஓட்டமான காட்சியைக் கண்டுரசிக்கின்றோம்.

பல ஆயிரக்கணக்கான மேய்ப்பர்கள் புல்வெளியில் ஒன்றுகூடுகின்றனர். அதற்கு காரணம் என்ன? அவர்கள் ஓராண்டில் மிகப் பிரமாண்டமான சிறப்பான விழாவைக் கொண்டாடுகின்றனர். அதாவது, நடாமு எனும் கொண்டாட்ட விழா. நடாமு என்ற சொல்லுக்கு, மங்கோலிய மொழியில், விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு என்ற பொருள். அறுவடை குறித்த மனமகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில், இந்த கொண்டாட்ட விழா நடைபெறும்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040