• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் தண்டவாளப் போக்குவரத்துக்கான முதலீடு அதிகரிப்பு
  2015-06-30 16:54:54  cri எழுத்தின் அளவு:  A A A   
முதலீட்டின் மூலம் பொருளாதார வளர்ச்சியை நிதானப்படுத்தும் வகையில், நகரத் தண்டவாளப் போக்குவரத்து, நவீன தளவாடங்கள், புதிய தொழிற்துறை, ஆக்கத் தொழிலின் போட்டியாற்றல் ஆகியவை தொடர்பான 4 திட்டப்பணிகளை முன்வைக்க சீனா திட்டமிட்டுள்ளது. மேலும், இவ்வாண்டில் தண்டவாளப் போக்குவரத்து துறையில் செய்யப்படும் முதலீடு கடந்த ஆண்டில் இருந்ததைத் தாண்டி, 30 ஆயிரம் கோடி யுவானை எட்டும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைமைச் செயலாளர் லீ புமின் 30ஆம் நாள் தெரிவித்தார்.

இதுவரை, சீனாவின் 22 நகரங்ளில் போக்குவரத்துக்கு வந்துள்ள தண்டவாளப் பயணத் தூரம், 2764 கிலோமீட்டரை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040