• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்கத் தேசிய இராணுவ நெடுநோக்குத் திட்டத்துக்கு சீனா எதிர்ப்பு
  2015-07-03 18:55:40  cri எழுத்தின் அளவு:  A A A   
2015ஆம் ஆண்டு தேசிய இராணுவ நெடுநோக்குத் திட்டம் பற்றிய அறிக்கையை அமெரிக்கா அண்மையில் வெளியிட்டது. இது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் ஜுலை 3ஆம் நாள் பதிலளித்தார். சீனாவின் அச்சுறுத்தல் குறித்து ஆதாரமின்றி பறைசாற்றிய இந்த அறிக்கைக்கு சீனா மனநிறைவின்மையையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறது. பனிப் போர் சிந்தனையை அமெரிக்கா கைவிட்டு, இருநாடுகளின் அரசுத் தலைவர்கள் உருவாக்கிய முக்கிய ஒத்த கருத்துக்கிணங்க புதிய சீன-அமெரிக்க உறவின் உருவாக்கத்துக்குத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஹுவா சுன்யிங் அம்மையார் குறிப்பிட்டார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040