• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார அதிகரிப்பு பற்றி சீனாவின் கருத்து
  2015-07-06 15:24:44  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன வெளியுறவு அமைச்சகம் 6ஆம் நாள் பெய்சிங்கில் செய்தியாளர் கூட்டம் நடத்தியது. அண்மைக்காலத்தில் பிரிகிஸ் நாடுகள் சில இன்னல்களை எதிர்நோக்குகின்றன. மேலும், சில நாடுகளின் பொருளாதாரம் அதிகரிக்காமல் இருக்கின்றது. சில நாடுகளில் சமூகப் பிரச்சினைகள் நிலவுகின்றன என்ற கூற்று பற்றி செய்தியாளரின் கேள்விக்கு சீனத் துணை வெளியுறவு அமைச்சர் சேங் கெள பீங் பதிலளித்தார்.

முதலில், தற்போது உலகப் பொருளாதாரத்துக்கு அதிகரிப்பு ஆற்றல் குறைவாக உள்ளது. வெளிப்புற பொருளாதார சூழல் மோசமாகி வருவதும், பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார அதிகரிப்பு வேகத்துக்குப் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு, இந்நிலையில் பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார அதிகரிப்பு வேகம் உலகளவில் தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருக்கின்றது. மூன்று, பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்புப் பயன் படிப்படியாக மேம்பட்டு வருகின்றது. இதனால் எதிர்கால உலகப் பொருளாதார அதிகரிப்பில் பிரிக்ஸ் நாடுகள் முக்கிய இயக்கு ஆற்றலாக இன்னமும் திகழ்கின்றது என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040