• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் சீனக் கடற்பரப்பில் வழக்கமான இராணுவப் பயிற்சி
  2015-07-26 18:15:17  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கடற்படை தென் சீனக் கடற்பரப்பில் மேற்கொண்ட இராணுவப் பயிற்சிகள் தொடர்பான செய்தி மற்றும் கூற்றுகள் குறித்து சீனக் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் லியாங் யாங் 25ஆம் நாள் மறுமொழி அளித்தார். இந்தப் பயிற்சிகள், சீனக் கடற்படையின் ஆண்டுக்கான பயிற்சித் திட்டத்திலுள்ள வழக்கமான ஏற்பாடுகளாகும். சீனாவுக்குரிய கடல் மற்றும் வான் பரப்புக்குள் சீனக் கடற்படை பயிற்சிகளை மேற்கொள்வது, தொடர்புடைய சர்வதேச சட்டம் மற்றும் கோட்பாட்டுக்குப் பொருந்தும். இது குறித்து வெளிநாடுகள் தவறாக புரிந்து கொள்ள கூடாது என்று விரும்புவதாக அவர் கூறினார்.

படைப்பிரிவுகளின் பயிற்சி நிலையைச் சோதித்து, கடற்பரப்பில் போரியக்க மற்றும் உத்தரவாதத் திறனையும், பல்வகை இராணுவக் கடமையை நிறைவேற்றும் திறனையும் உயர்த்துவது என்பது, சீனா மேற்கொண்ட வழக்கமான பயிற்சிகளின் நோக்கமாகும். எதிர்காலத்தில் இத்தகைய பயிற்சிகளை சீனக் கடற்படை தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் லியாங் யாங் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040