• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சீனாவின் எதிர்ப்பு
  2015-07-30 19:22:19  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்காவில் பொருளாதார வேவு நடவடிக்கை மேற்கொள்ள சீன தொழில் நிறுவனங்களுக்கு சீன அரசு ஆதரவளிப்பதாக அமெரிக்க கூட்டாட்சி புலனாய்வு பணியகம் அண்மையில் தெரிவித்தது. இது குறித்த கேள்விகளுக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோங் லெய் 30ஆம் நாள் பதிலளித்த போது, அமெரிக்காவின் இந்தக் கூற்று பொய்யான வதந்தி என்று தெரிவித்தார். மேலும், ஆதாரம் இல்லாத மற்றும் பொறுப்பற்ற குற்றச்சாட்டை வெளியிடுவதை அமெரிக்காவின் தொடர்புடைய நிறுவனம் நிறுத்தி, இருதரப்பின் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்புக்குத் துணைபுரியும் செயலில் அதிகமாக ஈடுபட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040