• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐஎஸ் அமைப்பின் மீதான தாக்குதல் பற்றி ரஷியா கருத்து
  2015-07-31 16:14:51  cri எழுத்தின் அளவு:  A A A   
தொடர்புடைய தரப்புகள் ஒன்றிணைந்து, ஐஎஸ் எனும் அதி தீவிரவாத அமைப்பைக் கூட்டாக ஒடுக்க வேண்டும் என்று ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் 30ஆம் நாள் தெரிவித்தார்.

இஸ்ரேலின் கோரிக்கைக்கிணங்க, புதின் அன்று இஸ்ரேல் தலைமை அமைச்சர் நெதந்யாஹுவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். மத்திய கிழக்கு பிரதேச நிலைமை குறித்து அவர்கள் தொலைபேசியில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என்று ரஷிய அரசுத்தலைவர் இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை தொடர்பான 2231ஆவது இலக்க தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பவை அண்மையில் ஏற்றுக்கொண்டது. தொடர்புடைய தரப்புகள் இத்தீர்மானத்தை நிறைவேற்றினால், மத்திய கிழக்கு பிரதேசத்தில் அணு ஆயுதமில்லாத நிலையை உறுதிப்படுத்தி, இப்பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைப்புத் தன்மைக்கு ஆக்கப்பூர்வத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று புதின் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040