• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்கின் வாக்குறுதி
  2015-07-31 19:37:16  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜூலை 31ஆம் நாள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்திய 128ஆவது முழு அமர்வில், சீனாவின் பெய்ஜிங் மாநகரம், 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் நகரமாக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பெய்ஜிங் எந்தெந்த வாக்குறுதிகளை வழங்கியது?விளையாட்டு வீரர்களை மையமாக கொள்வது, தொடரவல்ல வளர்ச்சி, விளையாட்டுப் போட்டியை சிக்கனமாக நடத்துவது ஆகியவற்றிலிருந்து விடைகளைக் கண்டறிய வேண்டும்.

முன்னதாக, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விண்ணப்பக் கமிட்டியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் பாஃங்லி பேசுகையில், தூய்மையான காற்றுடன் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவேம் என்று பெய்ஜிங் வாக்குறுதி வழங்கியதாக குறிப்பிட்டார்.

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் நகரத்துக்கான விண்ணப்பம் மூலம், பெய்ஜிங் மற்றும் சாங்சியாகோவின் இயற்கை சுற்றுச்சூழல் மேலும் வேகமாக மேம்பட்டு வருகிறது. உயிரின பாதுகாப்பு வரையறை மேலும் உயர்வாக இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொது மக்கள் மேலதிகமாக கலந்துகொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மொத்த வரவு செலவுத் தொகை, 151 கோடி அமெரிக்க டாலராகும் என்று விண்ணப்ப கமிட்டியின் நிதி மற்றும் சந்தைப் பிரிவின் துணைத் தலைவர் சோ சிங் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

சீனாவின் பொருளாதார வளர்ச்சி, உறுதியான அடிப்படையைக் கொண்டுள்ளது. இது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான வரவு செலவுக்கு நல்ல முன்நிபந்தனையை வழங்கியுள்ளது. பொருளாதார ஆற்றல் கொண்ட போதிலும் சிக்கனமான செலவுடன் வரலாற்றில் மிக உயர்நிலையிலான குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

சிக்கனம் மற்றும் தொடரவல்ல வளர்ச்சியுடன், விளையாட்டு வீரர்களை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். திட்டப்படி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் கிராமத்திலிருந்து, போட்டி திடலுக்கு செல்லும் தூரம், 50 மீட்டர் மட்டுமே. இதனால் பேருந்து போக்குவரத்தால் ஏற்படும் எரியாற்றல் செலவு பெருமளவில் குறைக்கப்படலாம்.

பெய்ஜிங்கும் சாங்சியாகோவும் சர்வதேச தனி விளையாட்டு சங்கத்தின் தொழில் நுட்ப வரையறைக்குப் பொருந்திய குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும். இதுக்குறித்து சாங்சியாகோ நகரத்தலைவர் ஹோ லியாங் பேசுகையில், சாங்கியாகோவின் பெரும்பாலான பனிப்பாதையில் உள்ள பனியளவு, சர்வதேச பனிச்சறுக்கு ஒன்றியத்தின் சான்றிதழைப் பெற்றுள்ளது. பனிச்சறுக்கு விளையாட்டு மேற்கொள்ளப்பட்ட 20 ஆண்டுகளில் சாங்சியாகோவில் ஆண்டுக்கு சராசரி பனியளவு 0.6 முதல் 1 மீட்டர் வரை எட்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040