• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
22ஆம் பெய்ஜிங் சர்வதேச புத்தகப் பொருட்காட்சி நிறைவு
  2015-08-31 14:31:44  cri எழுத்தின் அளவு:  A A A   
5 நாட்களாக தொடர்ந்த 22ஆவது பெய்ஜிங் சர்வதேச புத்தகப் பொருட்காட்சி 30ஆம் நாள் நிறைவுற்றது. அடிப்படை புள்ளிவிபரங்களின்படி, பதிப்புரிமை வர்த்தகம் தொடர்பான 4721 உடன்படிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டில் இருந்ததை விட 8.6 விழுக்காடு அதிகம்.

சர்வதேச புத்தகப் பொருட்காட்சித் துறையில், பெய்ஜிங் சர்வதேச புத்தகப் பொருட்காட்சி, உலகளவில் புகழ்பெற்ற மூன்று பதிப்புரிமை வர்த்தக மேடைகளில் ஒன்றாகும். சீனாவின் பல்வேறு வெளியீட்டு நிறுவனங்களைத் தவிர, பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் 1305 வெளியீட்டு நிறுவனங்கள் நடப்புப் பொருட்காட்சியில் கலந்து கொண்டன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் இருந்ததை விட 6.2 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040