• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிறுபான்மை இனங்களின் 10-வது பாரம்பரிய விளையாட்டுப் போட்டி
  2015-09-09 14:08:01  cri எழுத்தின் அளவு:  A A A   

தேசிய நிலை சிறுபான்மை இனங்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டி, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு ஆகஸ்டில் நடைபெற்ற போட்டியுடன் இணைந்து, இத்தகைய விளையாட்டுப் போட்டி மொத்தம் 10 ஆவது முறையாக நடைபெற்றது. சீனாவின் தியன் ஜின், உள்மங்கோலியா, சின்ஜியாங், குவாங்ஷி, யுன்னான், குய்ட்சோ ஆகியற்றில் இது முறையே நடத்தப்பட்டுள்ளது. 10-வது பாரம்பரிய விளையாட்டுப் போட்டி இவ்வாண்டு ஆகஸ்டு 9 முதல் வரை 17ஆம் நாள் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் ஏர்டோஸ் நகரில் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியில் 2 முக்கிய வகைகள் இடம்பெற்றன.

ஒன்று, போட்டித்தன்மையான 17 விளையாட்டு வகைகள் அடங்கும். எடுத்துக்காட்டாக, பல்வகை பந்து விளையாட்டு, படகுப் போட்டி, குங்ஃபூ கலை, மல்யுத்தம், குதிரைப்பந்தயம் இவையாகும். இரண்டாவது பெரிய வகையில், 178 அரங்கேற்ற நிகழ்ச்சிகள் அடங்கும்.

கடந்த ஆகஸ்டு திங்களில் நடைபெற்ற 10-வது விளையாட்டுப் போட்டியில், இரண்டு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சிறுபான்மை இனங்களின் பாரம்பரிய விளையாட்டுகளை மேலதிக அளவில் வளர்த்து பரவல் செய்யும் வகையில், குழுவிளையாட்டுப் போட்டிகளிலும் அரங்கேற்ற நிகழ்ச்சிகளிலும், குறிப்பிட்ட விகிதத்துடன் ஹான் இனத்தவர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது, முதலாவது மாற்றம். அனைவரும் உடற்பயிற்சியில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையிலும், சிறுபான்மை இனங்களின் பண்பாட்டை பரப்புரை செய்யும் வகையிலும், 20க்கும் அதிக வகையான தனிச்சிறப்புமிக்க உடற்பயிற்சிகள் இப்போடியில் புதிதாக சேர்க்கப்பட்டன. இது, இரண்டாவது பெரிய மாற்றமாகும். பாரம்பரிய விளையாட்டப் போட்டி நடைபெற்ற போது, பெரும் கொண்டாட்டம், திரைப்படம் ஒளிபரப்பு உள்ளிட்ட செழுமைமிக்க நிகழ்ச்சி நடந்தேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040