• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
18ஆம் நூற்றாண்டில் கடலில் மூழ்கிய தங்கம் மீட்பு
  2015-09-18 19:09:02  cri எழுத்தின் அளவு:  A A A   

சுமார் 300 ஆண்டுகளுக்குப் பின்னர், இழந்த அதே பொருள் மீண்டும் கிடைத்தால் அதன் மகிழ்ச்சியை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அந்த வகையில், கடலில் மூழ்கிய 45 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான தங்க்க் காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 1715ஆம் ஆண்டு ஜூலை திங்கள், ஹவாணாவிலிருந்து

18ஆம் நூற்றாண்டில் வீசிய கடுமையான புயலினால் கப்பல் உடைந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாண கடற்பகுதியில் மூழ்கியது. அதில், 350-க்கும் மேற்பட்ட தங்க நாணயங்கள் இருந்துள்ளன.

சுமார் 300 ஆண்டுகளுக்குப் பின், அந்த்த் தங்க நாணயங்கள் கடந்த ஜூலை திங்கள் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட நாணயங்கள் ஒவ்வொன்றும் அரிதானாகும். ஒவ்வொன்றின் மதிப்பும் 3 லட்சம் அமெரிக்க டாலர் என்று 1715 ப்ளீட்-குயின் ஜூவல்லர்ஸ் நிறுவன தலைவர் பிரென்ட் பிரிஸ்பேன் தெரிவித்துள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்டவற்றில் 9 நாணயங்கள், ஸ்பெயின் அரசரசின் உத்தரவின் பேரில், அரச வம்சத்துக்காக உருவாக்கப்பட்டது. அது பொக்கிஷம் என்றும் அவர் தெரிவித்தார். கண்டுபிடித்த தங்க நாணயங்கள் அனைத்துக்கும் அந்த நிறுவனம் உரிமை கொண்டாட முடியாது. காரணம், அமெரிக்க சட்டப்படி, அதன் கடற்கரையில் கிடக்கும் பொருள்களின் மதிப்பில் 20 சதவீதம் அந்நாட்டுக்கு உரிமையானது.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040