• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தமிழ் பெண் ஆசித்தா அளித்த நேர்காணல்
  2015-09-23 15:17:11  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் ஹெனான் மாநிலத்தின் லுயங்லாங்மெனில் நடைபெற்ற கலாச்சார பண்பாடு மற்றும் சுற்றுலா துவக்க நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழுவினர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்திய நாட்டைச் சேர்ந்த குழுவினர்களும் பங்கெடுத்தனர். இந்த குழுவில் மொத்தமாக 17 பேர் வந்திருந்தனர், இவர்களில் ஒருவர் தமிழ் பெண் ஆசித்தா ஆவார்.

ஆசித்தா இந்த குழுவின் மிக இளம் வயது கலைஞர் ஆவார், இவர் 5 ஆண்டுகளுக்கு மேலாக பரத நடனம் பயின்றுவருவதாக தெரிவித்தார். தற்போது 9 ஆம் வகுப்பு படிக்கும் ஆசித்தா, சென்னையில் பிறந்தவர், தற்போது பெற்றோரின் பணி சூழல் காரணமாக குஜராத்தில் வசிக்கிறார்.

இந்த கலாச்சார நடவடிக்கையில் பங்கெடுப்பதற்காக ஒரு திங்களுக்கு முன்னாதாகவே அவர்கள் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டதாகவும், தனக்கு வாழ் நாளில் மறக்க முடியாத பயண அனுபவத்தை சீனா வழங்கி உள்ளது என்றும், தனக்கு மட்டுமல்லாது எங்களது குழுவினர்களுக்கும் இந்த பயணம் ஒரு வெற்றிப் பயணம் என்றார்.

தங்களது குழுவினர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சியில் ஷாங்காயில் நடைபெற்ற நிகழ்ச்சி மிகுந்த வரவேற்ப்பை பெற்றதாகவும், அது வித்தியாசமான அனுபவத்தை வழங்கியது என்றும் தெரிவித்தார், மேலும் சீன மக்கள் எங்களுடம் இணைந்து நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டது எங்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

சீனாவின் வளர்ச்சியை நேரில் பார்த்து வியப்பதாகவும் அதே நேரத்தில் மகிழ்ச்சியை தருவதாகவும் அவர் தெரிவித்தார். சீன பயணிகளையும் இந்தியாவிற்கும் சுற்றுலா புரிய வருமாறு அழைப்பு விடுத்தார் இந்த இளம் கலைஞர் ஆசித்தா. 

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040