• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்களின் வெளிநாட்டு பயணம் அதிகரிப்பு
  2015-10-05 18:59:51  cri எழுத்தின் அளவு:  A A A   
தேசிய விழா விடுமுறையில் பாதி அளவு கழிந்து விட்டது. இந்நிலையில், சீனாவின் வெளிநாட்டுப் பயணச் சந்தையில் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 30 விழுக்காடு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாண்டின் தேசிய விழா விடுமுறையில், ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட சுற்றுப்புற நாடுகள் சீனப் பயணிகளிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்று சீனத் தேசிய சுற்றுலா பணியகம் 4ஆம் நாள் தகவல் வெளியிட்டது.

மேலும், உள்நாட்டுச் சுற்றுலா சந்தையும் விறுவிறுப்பாக உள்ளது. ஆனால், முஜிகே எனும் சூறாவளி 4ஆம் நாள் குவாங்தோங் மாநிலத்தின் கடலோர பிரதேசத்தைப் பாதித்துள்ளதால், இவ்விடுமுறையின் பிற்பாதியில் சீனாவின் தெற் பகுதியிலுள்ள பல மாநிலங்களின் வானிலை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்படும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040