• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அடுத்த ஆண்டு தொடரும் தேடுதல் பணி
  2015-10-06 18:39:58  cri எழுத்தின் அளவு:  A A A   
எம்எச் 370 பயணியர் விமானத்தைத் தேடும் பணி அடுத்த ஆண்டும் தொடரும் என்று மலேசிய பயணியர் விமானச் சேவை நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பாளர் அச்சருட்டின் 5ஆம் நாள் கோலாலம்பூரில் தெரிவித்தார்.

பிரான்சு நாட்டைச் சேர்ந்த ரியூனின் தீவில் கண்டறியப்பட்ட விமானச் சிதைவுகள் எம்எச் 370 விமானத்தின் பகுதிகள் என்று உறுதி செய்யப்பட்ட பின், தொடர்புடைய தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை இதர சிதைவுகள் ஏதும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில், எம்எச் 370 விமானத்தைத் தேடும் பணி அடுத்த ஆண்டும் தொடரும் என்று மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் உடன்பட்டுள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040