• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் பொருளாதாரச் சீர்திருத்தத் திறன்
  2015-10-06 18:45:07  cri எழுத்தின் அளவு:  A A A   
பொருளாதார வளர்ச்சி குறையும் இடர்ப்பாடு அதிகரித்த போதிலும், பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றத்தை நனவாக்குவதற்குரிய திறமை சீனாவுக்கு உண்டு என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் பிரிவுத் தலைவர் ரீ சாங்யொங் 5ஆம் நாள் வெளியிட்ட கட்டுரையில் கருத்து தெரிவித்தார்.

அடிப்படை வசதிகளுக்கான முதலீடு, நுகர்வு, குறிப்பாக சேவைத் துறை ஆகியவை சீரான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்துவதால், சீனப் பொருளாதாரம், ஏற்றுமதி மற்றும் முதலீட்டை சார்ந்திருக்கும் அளவு குறைக்கப்படலாம். இதனால், நுகர்வு மற்றும் சேவையை இயக்கு ஆற்றலாக கொள்ளும் வளர்ச்சி முறை மாற்றம் நனவாக்கப்படும் என்று அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டார்.

மேலும், பொருளாதார வளர்ச்சி விரைவாகக் குறையும் போக்கை சீனா தான் மேற்கொள்ளக் கூடிய கொள்கைகள் மூலம் சமாளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040