• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தலைமை அமைச்சர்-தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சந்திப்பு
  2015-10-09 20:29:53  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமை அமைச்சர் லீகெச்சியாங் 9ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சர் டான் ப்ரமுட்வினாய்யைச் சந்தித்தார்.

ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறும் வகையிலும், இருநாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலும், தாய்லாந்துடன் பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்தி, பல்வேறு துறைகளிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள சீனா விரும்புகிறது என்று லீகெச்சியாங் தெரிவித்தார்.

சீன-தாய்லாந்து இருப்புப்பாதை ஒத்துழைப்பு, இருதரப்பு ஒத்துழைப்பில் முக்கிய அம்சமாகும். இருநாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும், சீன-தாய்லாந்து பொருளாதார ஒத்துழைப்பையும் பண்பாட்டுத் தொடர்பையும் வலுப்படுத்துவதற்கும் இது துணைபுரியும் என்று அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040