• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ச்சுவான் சோ நகரம்
  2015-10-20 16:47:59  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆனால், மிங் மற்றும் சிங் வம்சக்காலத்தில், கடல் போக்குவரத்து மீதான தடை கொள்கையின் பாதிப்பு காரணமாக, ச்சுவான் சோ துறைமுகத்தின் விறுவிறுப்பு இழந்து விட்டது. இதனிடையில் உள்ளூர் மக்கள் பலர் தென் கிழக்காசிய நாடுகளுக்குச் சென்றனர். எனவே தற்போதைய ச்சுவான் சோ, வெளிநாடுகளில் வாழ்கின்ற சீனர்களின் முக்கிய ஊர்களில் ஒன்றாகும். வெளிநாடுகளில் வாழ்ந்து வயதாகிய சீனர்கள் பலர் சொந்த ஊர் மீதான வீடு பற்றிய ஏக்கத்தைத் தீர்க்கும் வகையில் ச்சுவான் சோவுக்கு வர விரும்புகின்றனர். இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட சிங்கப்பூரில் வாழும் சீனர்கள் குழுவை எமது செய்தியாளர்கள் சந்தித்தனர். இக்குழுவின் தலைவர் ஹான் ஷான்யுவான், சிங்கப்பூரின் லியன் ஹே சௌ பௌ எனும் செய்தித்தாளின் முன்னாள் பதிப்பாசிரியராகவும், ஹாய்நான் தொழிற்சங்க மண்டபத்தின் சீன வரலாற்று வகுப்பு ஆசிரியராகவும் இருக்கிறார். தாய்நாடான சீனாவின் பாரம்பரிய பண்பாடு பற்றி அவர் பெருமையுடன் கூறியதாவது—

"சிங்கப்பூரில் தொழிற்சங்க மண்டபங்கள் அதிகம். அவை ஒவ்வோர் ஆண்டும் பண்பாட்டு வகுப்புகளை நடத்துகின்றன. சீனாவில் பண்பாடு பற்றிய அறிவுகளைக் கற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகளையும் செய்கின்றன. பண்பாட்டின் மீதான தன் மதிப்பையும், தேசத்தின் மீதான பெருமை மற்றும் நம்பிக்கையையும் சீனர்கள் நிலைநிறுத்த வேண்டும் எனக் கருதுகின்றேன்" என்று அவர் தெரிவித்தார்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040