• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ச்சுவான் சோ நகரம்
  2015-10-20 16:47:59  cri எழுத்தின் அளவு:  A A A   

ச்சுவான் சோ நகரின் ஆழமான பண்பாட்டு மற்றும் வரலாற்று சேமிப்பு, தங்களது வருகையை ஈர்த்து வருகிறது என்று ஹான் ஷான்யுவான் கூறினார். ச்செங் ஹே பயணத்தின் வரலாறு, நடப்பு சீனப் பண்பாட்டு வகுப்பில் அவர்கள் முக்கியமாக ஆய்வு செய்யும் அம்சமாகும். இது குறித்து அவர் கூறியதாவது—

"சீனப் பண்பாடு மற்றும் வரலாறு தொடர்பான கல்வி மூலம், ச்செங் ஹே என்பவர், பரந்த நோக்குடையவர் என உணர்ந்து கொள்கிறோம். முஸ்லிம் என்ற முறையில், பௌத்தமதத்துக்கும், சீன மக்கள் நம்புகின்ற மாட்சு எனும் தேவதைக்கும் அவர் மதிப்பளித்தார். அவரது இந்த சிந்தனை கற்றுக் கொள்ளப்படத்தக்கது. வெளிநாட்டவர் சிலர் சீனா மீது தவறான எண்ணெம் கொண்டிருக்கின்றனர். சீன வரலாறு பற்றி அவர்கள் உணர்வுப்பூர்வமாக கற்றுக் கொண்டு, ச்சுவான் சோவில் பயணம் செய்தால், தாங் மற்றும் சொங் வம்சக்காலத்தில் சீனாவின் திறப்பு கொள்கை எப்படி பல்வேறு நாடுகளின் வணிகர்களையும் மண்பாட்டு மற்றும் மதத் துறை பிரமுகர்களையும் வரவேற்ற உண்மையை அறிந்து கொள்ள முடியும்" என்று அவர் குறிப்பிட்டார்.

ச்சுவான் சோ நகரம் கொண்டிருக்கும் திறப்பு மற்றும் சகிப்பு தன்மை மேலும் அதிகமான கவனத்தை ஈர்க்கும். இங்கே பயணம் மேற்கொண்டால், அதன் நல்லிணக்கத்தை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.


1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040